ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

Rajinikanth and Kamal Haasan Movie : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த் - கமல் ஹாசன் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

Published: 

29 Jan 2026 14:32 PM

 IST

தமிழ் சினிமாவின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இருவரும் உச்ச நடிகர்களாக வலம் வரும் நிலையில் ஆரம்ப காலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பின்பு நாயகனாக நடிக்கத் தொடங்கினார். நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் போதுதான் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த். பிறகு கமல் ஹாசனின் படங்களில் வில்லனாக நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். பிறகு கமல் ஹாசனா ரஜினிகாந்தா என்று ரசிகர்கள் போட்டிப்போடும் அளவிற்கு தொடர்ந்து இருவரும் போட்டிப்போட்டு நடிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் கடந்த 50 வருடங்களாக இவர்கள் இருவரின் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்தது. ரஜினிகாந்த் நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் நடித்தாலும் அவர் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. இவர்களின் கூட்டணி எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது அது தொடர்பான தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரஜினி – கமல் மீண்டும் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்?

இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து தற்போது அப்டேட் வெளியகி உள்ளது. அதன்படி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்திற்கான அறிவிப்பு வீடியோ அடுத்த மாதம் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் படம் கோலிவுட் சினிமாவில் ஒரு மயில்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… ஸ்ருதி ஹாசனின் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட ஆகாசம்லோ ஓக தாரா படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது மகன் யாத்ரா ராஜாவை நடிகராக அறிமுகப்படுத்தும் தனுஷ்?

40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அழிந்துபோன பாம்பு இனம்
போர் சூழல்.. பதிலளிக்க தயாராக இருக்கும் ஈரான்..
மீண்டும் ஒரே மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் - விஜய் சேதுபதி.. எங்கு தெரியுமா?
அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்.. சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்..