தனுஷ் படத்திற்கு முன்பு மாரி செல்வராஜ் அந்த ஹிட் படத்தின் பார்ட் 2 இயக்க உள்ளாரா? வைரலாகும் தகவல்
Director Mari Selvaraj Next Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக எந்தப் படம் உருவாக உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் கசிந்து வைரலாகி வருகின்றது.

மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். நடிகர்கள் கதிர் மற்றும் கயல் ஆணந்தி இருவரும் இணைந்து நடித்த இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் காளமாடன் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் இறுதியாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பைசன் காளமாடன்.
இந்தப் படம் உண்மைக் கதையை மையமாக வைத்து படமாக்கப்பட்டது. இந்தப் படதில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அனுபமா பரமேசுவரன் நாயகியாக நடித்து இருந்தார். விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருந்ததால் இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வாழை 2 படத்தை இயக்க தயாராகும் இயக்குநர் மாரி செல்வராஜ்:
இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷின் படத்தை இயக்க அடுத்தாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ், அடுத்ததாக ‘வாழை 2’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதிர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காயத் லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றவுள்ளனர். இப்படத்தை மாரி செல்வராஜ் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி ரிலீஸை லாக் செய்தது படக்குழு – அப்டேட் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,
– Director #MariSelvaraj is set to direct #Vaazhai2 next. #Kathir will play the lead role, while #KayaduLohar and #AnupamaParameswaran will be seen in important roles. The film will be jointly produced by Mari Selvaraj and Netflix. pic.twitter.com/DlwMe8BkXJ
— Movie Tamil (@_MovieTamil) May 1, 2026