நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்

Couple Friendly Director Ashwin Chandrasekhar : சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் வெளியாகும் சின்ன சின்ன படங்கள் தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் கப்புள் ஃப்ரண்ட்லி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்

தனுஷ் மற்றும் அஷ்வின் சந்திரசேகர்

Published: 

23 Apr 2026 21:49 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கப்புள் ஃப்ரண்ட்லி. இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சந்தோஷ் சோபன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மானஸா வாரணாசி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜீவ் கனகலா,
கோபராஜு ரமணா, தீரஜ் ரெட்டி, லிவிங்ஸ்டன், யோகி பாபு, சுனில் ரெட்டி, நரசிம்மா, பார்கவ் ராம், விஜய் வல்லபனேனி, ஸ்ரீரஞ்சனி, பிரமோதினி பம்மி, அஞ்சலி நாயர், ஃபௌஸி, ஹிமா வர்மா, தரணி வி, சாவித்திரி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டதால் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் தற்போது நடிகர் தனுஷிற்கு கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்:

இயக்குநர் அஷ்வினின் அடுத்த திட்டம் குறித்தும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இணையாக, மூத்த தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னமும், மற்றொரு சாத்தியமான கூட்டு முயற்சி குறித்து இயக்குனருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால், தனது அடுத்த நகர்வை முன்னெடுக்கும் அஷ்வின் சந்திரசேகர் தற்போது ஒரு வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எந்தத் திட்டம் முதலில் செயல்வடிவம் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… தமிழகத்தில் ஜன நாயகக் கடமையை ஆற்றிய உச்ச நடிகர்கள்… யார் யார் என்று தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… குடிமக்கள் தற்போது குடிகார மக்கள்.. ஓட்டு போட வந்து கொந்தளித்த சிவக்குமார்

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..