இயக்குநர் சங்கரின் வேள்பாரி படம் குறித்து வைரலாகும் முக்கிய அப்டேட்!
Director Shankar Velpari Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே முன்னதாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சங்கர்
தமிழ் சினிமாவில் பழம்பெரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் இயக்குநர் சங்கர். இவர் தொடர்ந்து உதவி இயக்குநராக பணியாற்றிய போது தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1993-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஜென்டில் மேன் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கல்வி துறையில் நடைபெறும் ஊழகள் குறித்து பேசப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியான படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என தொடர்ந்து பல நடிகர்களை நாயகன்களாக வைத்து படங்களை இயக்கி உள்ளார். தான் எடுக்கும் படங்களில் செட் மிகவும் பிரமாண்டமாக அமைப்பதை வழக்கமாக வைத்துள்ள இயக்குநர் சங்கரை ரசிகர்களும் திரையுலகினரும் பிரமாண்ட இயக்குநர் என்று செல்லமாக அழைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சங்கர் தனது கனவு திட்டம் என்று சொல்லும் வேள்பாரி படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சங்கரின் வேல்பாரி படம் குறித்து வைரலாகும் முக்கிய அப்டேட்:
அதன்படி தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான ‘வேள்பாரி’ திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பென் மீடியா தயாரிக்கிறது. படத்திற்குத் தேவையான சரியான பட்ஜெட் மற்றும் தேதிகளைக் கேட்டுள்ள பென் மீடியா, பட்ஜெட்டை மீறக்கூடாது என்பதற்காக ஷங்கரிடமிருந்து எழுத்துப்பூர்வமான உறுதிமொழியையும் கோரியுள்ளது. ஷங்கர் தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு மற்றும் பட்ஜெட் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மீண்டும் இணைகிறது குட் பேட் அக்லி கூட்டணி… வைரலாகிறது ஏகே 64 படத்தின் சூப்பர் அப்டேட்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
As Per Valaipechu,
Bollywood production House #PenMedia to produce Director #Shankar‘s Magnum Opus #Velpari💥Pen Media has asked for the exact Budget & Dates which is required for the film & asked for a written statement from Shankar, to not exceed the budget !!
Shankar is… pic.twitter.com/ulHhLJTSt0
— AmuthaBharathi (@CinemaWithAB) January 28, 2026
Also Read… தலைவர் 173 படம் எப்படி இருக்கும்? சினிமா வட்டாரத்தில் பரவும் தகவல்