அழகிய லைலா… சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ரம்பா – வைரலாகும் செய்தி

Actress Rambha Re-entry into Films: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அழகிய லைலா... சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ரம்பா - வைரலாகும் செய்தி

ரம்பா

Published: 

23 Feb 2026 16:21 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 1992-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆ ஒக்கடி அடக்கு என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்கத் தொடங்கினார் நடிகை ரம்பா. 16 வயதிலேயே சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை ரம்பா அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து வந்தார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா பல நூறு படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பலப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் நடிகர்கள் கார்த்திக், அஜித் குமார், அர்ஜுன், சரத்குமார், பிரசாந்த் மற்றும் விஜய் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இதில் அதிக அளவில் நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் நடிகை ரம்பா நாயகியாக மட்டும் இன்றி நடனத்திற்காகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா:

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை ரம்பா நிறுத்தியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்பா தற்போது மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை ரம்பா நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… தளபதி விஜயிடம் ஒரு கதை கூறினேன்… ஆனால் – இயக்குநர் பா ரஞ்சித் சொன்ன விசயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sivakarthikeyan: எவ்வளவு பேர் எதிர்த்தாலும்.. என்னை மிதித்தாலும்.. எனது ரசிகர்கள் – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பேச்சு!

Follow Us
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்