ஓடிடியில் ஜூன் மாதம் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ படம்? வைரலாகும் தகவல்
Retro Movie OTT Update: நடிகர்கள் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலகி வருகின்றது.

ரெட்ரோ
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Director Karthik Subbaraj) இயக்கத்தில் சூர்யாவின் (Actor Suriya) 44-வது படமாக வெளியானது ரெட்ரோ. மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சூர்யா நாயகனாகவும் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாஸ், நாசர், சுவாசிகா என பலர் இந்தப் படத்தில் முக்க்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படம் மே மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் ஓடிடியில் ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு முதல் வாரம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இந்தப் படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளதை அறிவித்தது. மேலும் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களை கடந்த பிறகு ஓடிடியில் வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ கதை என்ன?
ஜோஜூ ஜார்ஜின் வளர்ப்பு மகனாக இருக்கும் சூர்யா தனது காதலி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்வதற்காக அடிதடி எல்லாம் விட்டுவிட்டு வாழ நினைக்கிறார். ஆனால் எதிர்பாராத சூழல் காரணமாக திருமணத்தின் போது தனது வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சூர்யா. இதனால் திருமணமும் நின்றுவிடுகின்றது.
பிறகு தனது காதலி பூஜா ஹெக்டே எங்கு உள்ளார் என்று நண்பர்கள் மூலமாக தேடி கண்டுபிடிக்கும் சூர்யா ஜெயிலில் இருந்து தப்பித்து அவரைப் பார்ப்பதற்காக செல்கிறார். அங்கு சூர்யாவிற்கு வேறு ஒரு ஃப்ளாஸ்பேக் காத்திருக்கின்றது. அதன்பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
ரெட்ரோ படத்தின் வசூல் நிலவரம்:
நடிகர் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இறுதியாக வெளியான ரெட்ரோ படம் தான் அவருக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் கொடுத்தது. அது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரெட்ரோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Dear Audience and #AnbaanaFans, we’re humbled by your immense love and support for #TheOne ‼️
Grateful for the glory, it’s all because of you ❤#RETRO@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_A @rajsekarpandian… pic.twitter.com/wScjYwaqu4
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 18, 2025