வித் லவ் பட ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் அந்த காட்சி இல்லை – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Soundarya Rajinikanth About With Love Movie: அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜனின் நடிப்பில் தயாராகியுள்ள காதல் திரைப்படம்தான் வித் லவ். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில், தான் இணைக்க சொன்ன காட்சிகள் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

வித் லவ் பட ஒரிஜினல் ஸ்க்ரிப்டில் அந்த காட்சி இல்லை - சௌந்தர்யா ரஜினிகாந்த்!

வித் லவ் திரைப்படம்

Updated On: 

05 Feb 2026 16:47 PM

 IST

இயக்குநராக மக்களிடையே தனது முதல் படத்திலே பிரபலமானவர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevitnh). இவருக்கு கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டூரிஸ்ட் பேமிலி (Tourist family) என்ற படத்தின் மூலம் மக்களிடையே அங்கீகாரம் கிடைத்தது. இப்படத்தை வெறும் இயக்குநராக மட்டுமில்லாமல் ஒரு கேமியோ வேடத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. இதன் பின் சினிமாவில் தனது இரண்டாவது படத்திலே கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த திரைப்படம்தான் வித் லவ். இதை அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்க, சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth) தயாரித்துள்ளார். இந்த படமானது 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், இப்படத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் அபிஷன் ஜீவிந்த் நடனமாடுவது போன்ற காட்சிகள் எழுதப்படவில்லை என்றும், அதை நான் தான் சேர்க்க சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பூக்கி படத்திலிருந்து வெளியானது புடிக்கலே புடிக்கலே வீடியோ பாடல்

வித் லவ் படத்தில் நடனக் காட்சிகள் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், அதில் “வித் லவ் திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்டில் அபிஷன் ஜீவிந்த் நடனமாடுவது போன்ற காட்சிகள் எதுவும் திட்டமிடவில்லை. அபிஷன் ஜீவிந்த் ஒரு அருமையான நடனக் கலைஞர். இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியான பிறகு, அனைவரும் அவரின் நடனத்தை பற்றிப் பிரபலமாகி பேசத் தொடங்கினர். இயக்குநர் மதனனின் ஒரிஜினல் ஸ்கிரிப்ர்ட்டில் அபிஷன் ஜீவிந்த் நடனமாடும் காட்சிகள் இடம்பெறாததால், ஒரு தயாரிப்பாளராக நான்தான் அவரிடம் இந்த காட்சிகளை சேர்க்க சொன்னேன்” என அவர் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

வித் லவ் திரைப்படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு:

இந்த வித் லவ் படமானது வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகுகிறது. இந்த படமானது பள்ளிப்பருவ காதல் குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் ஏற்கனவே திரையிடப்பட்ட நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது – நடிகர் சிலம்பரசன்

மேலும் இப்படமானது திரையரங்க திரையிடலுக்குப் பின்னே மக்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை அடுத்ததாக அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்திருக்கும் இந்த வித் லவ் படமும், சூப்பர் ஹிட் வெற்றியைப் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவரின் வாழ்க்கைக்கே மதிப்பு இல்லை’.. தொழிலதிபர் வேதனை!!
‘மார்கோ’ பட இயக்குநருடன் பெரும் பட்ஜெட் படத்தில் நடிக்க தயாராகும் பாலகிருஷ்ணா!
புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி..
உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்