Mandaadi: சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் நிறைவு.. படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!
Mandaadi Movie Shooting Wrap: ஆரம்பத்தில் காமெடி நாயகனாக நடித்து, தற்போது லீட் நாயகனாக சூரி நடித்துவருகிறார். கடற்கரை மற்றும் கப்பல் போட்டி தொடர்பாக இவர் நடித்துவந்த புதிய படம்தான் மண்டாடி. கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக ஷூட்டிங் நடந்துவந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது.

மண்டாடி திரைப்பட படப்பிடிப்பு நிறைவு
நடிகர் சூரியின் (Soori) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் இவர் நடித்துவந்த நிலையில், தற்போது லீட் ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குநர் வெற்றிமாறன் (vetrimaaran) மூலம் விடுதலை பார்ட் 1 படத்தின் ஹீரோவாக அறிமுகமான நிலையில், அதை தொடர்ந்து தற்போதுவரையிலும் படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் வெளியான மாமன் (Maaman) என்ற படமானது சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவரின் நடிப்பில் உருவாகிவந்த ஆக்ஷன் மற்றும் கடற்கரை சார்ந்த திரைப்படம்தான் மண்டாடி (Mandaadi). இதை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்க, ஆர்.எஸ். இன்போடைமென்ட் என்ற நிறுவனம் தயாரித்துவந்தது.
இதில் சூரி லீட் நாயகனாக நடிக்க, அவருடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ் (Suhas), நடிகை மகிமா நம்பியார் (Mahima Nambiar), சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் என பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துவந்தனர். அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த பதிவை நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!
மண்டாடி படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Mandaadi 🎬😍
It’s a wrap.
Grateful for every effort and the unconditional support that made this possible. 🙏💐
💥🌊▶️ : https://t.co/lIxRS4pLis#Mandaadi @ActorSuhas @elredkumar #vetrimaaran @rsinfotainment @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar@RavindraVijay1…
— Actor Soori (@sooriofficial) April 24, 2026
இந்த பதிவில் சூரி, “இதைச் சாத்தியமாக்கிய ஒவ்வொரு முயற்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவிற்கும் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார். மண்டாடி படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, படக்குழு பட்ட கஷ்டங்கள், ஷூட்டிங் பணியின்போது நடந்த விபத்துகள் என அனைத்தயும் பகிர்ந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம்தான் இந்தியாவிலே, முதல் முறையாக கடலில் கப்பல் போட்டியை மையமாக கொண்டு இயக்கப்பட்ட படம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிப்பதை உறுதி செய்த யோகி பாபு!
அந்த வகையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் சுஹாஸ் இருவருமே லீட் நடிகர்களாக படத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது ஆக்ஷன், திரில்லர் மற்றும் சுவாரஸ்ய கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்ப்புறக்கப்படுகிறது. அந்த வகையில் இப்படம் இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.