ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன் படம்… எப்போது தெரியுமா?

Maaman Movie OTT Update: நடிகர் சூரியின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேறபைப் பெற்றப் படம் மாமன். இந்தப் படம் முன்னதாகவே ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எப்போது படம் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன் படம்... எப்போது தெரியுமா?

மாமன்

Published: 

24 Jun 2025 10:43 AM

நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து மிகவும் சீரியசான கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வந்தார். காமெடியனாக சினிமாவில் அறிமுகம் ஆன நடிகர் சூரி நாயகன் அந்தஸ்தைப் பெற்ற பிறகு சீரியசான கதைகளில் நடித்து வந்தது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஏமாற்றத்தை போக்கும் விதமாக நடிகர் சூரி முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து நடித்தப் படம் மாமன். இந்தப் படம் திரையரங்குகளில் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் ரசிகர்களிடையேப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்ட இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஓடிடியில் வெளியாகும் சூரியின் மாமன் படம்:

இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனம் பெற்றுவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாமன் படம் திரையரங்குகளில் வெளியாகி  5 வாரங்களை கடந்த நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாமன் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை குறித்து சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சூரியின் மாமன் பட கதை என்ன?

தாய் மாமன் மற்றும் மருமகனின் பாசப் போராட்டாமே இந்த மாமன் படத்தின் கதை ஆகும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் அக்காவிற்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மீது உயிரே வைத்து இருக்கும் சூரிக்கு திருமணம் முடிந்த பிறகு சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் அந்த குழந்தையை பிரிந்து வாழும் சூழல் ஏற்படுகின்றது. அதன் பிறகு அந்த பிரச்சனைகள் எப்படி சரியானது என்பதே படத்தின் கதை.