SJ Suryah: சூப்பர் ஹீரோ படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே. சூர்யா.. வைரலாகும் பர்ஸ்ட் லுக்!
Adhira Movie First Look: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் தமிழில் கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்த வருகிறார். மேலும் தெலுங்கில் இவர், ஆதிரா என்ற படத்தில் வில்லனாக நடித்து வரும் நிலையில், முதல் பார்வை வெளியாகியுள்ளது.

அதிரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா (SJ.Suryah). இவர் நடிப்பதும் மட்டுமில்லாமல், படங்களை இயக்கியும் வருகிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அவர், தற்போது படங்ககளில் வில்லனாகவும் சிறப்பு வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது, சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநராக கில்லர் (Killer) என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இயக்கத்தில் உருவாகும் கில்லர் படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா, தனது இயக்கத்தில் உருவாகிவரும் கில்லர் படத்தை தொடர்ந்து, தெலுங்கிலும், பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இயக்குநர் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுவிவெர்ஸில் (Prashant Varma Cinematic Universe) , உருவாகிவரும் “அதிரா” (ADHIRA) படம்தான் அது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, அறிமுக நடிகர் கல்யாண் தாசரி (Kalyan Dasari) ஹீரோவாகி நடித்து வருகிறார். தற்போது இது தொடர்பான முதல் பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ஈஸ்வரன் இன்னும் இருக்காரா? காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இதோ
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட அதிராபடத்தின் பர்ஸ்ட் லுக் பதிவு ;
Very excited to feel and live in #PVCU sir 🥰🙏sjs & congrats @IamKalyanDasari sir for Ur launch as #Hero 🥰🔥👍🙌 https://t.co/2p6oGm43MS
— S J Suryah (@iam_SJSuryah) September 22, 2025
அதிரா திரைப்படம் :
தெலுங்கில் உருவாகிவரும் இந்த அதிரா படத்தில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கிவருகிறார். இதில் கல்யாண் தாசரி மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது சூப்பர் ஹீரோ போன்ற கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம்.
இதையும் படிங்க ; குஷி படத்தின் கதை சொல்லும்போது விஜய் சாரின் ரியாக்ஷன் இதுதான் – எஸ்.ஜே. சூர்யா சொன்ன விஷயம்!
இந்த படத்தை ஆர்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் திரைப்படம் :
நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் உருவாகிவரும் படம் கில்லர். இந்த படத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த கில்லர் படமானது கார் ரேஸ் மற்றும் ஆக்ஷன் சார்ந்த கதைக்களத்தில் உருவாகிவருகிறதாம்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கிய நிலையில், மேலும் அடுத்தகட்டமாக வெளிநாடுகளிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வெறும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.