Parasakthi: கெரியர் பெஸ்ட்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Parasakthi Day 1 Worldwide Collection: தமிழ் சினிமாவில் இந்த 2026ல் முதல் பிரம்மாண்ட படமாக வெளியாகியிருப்பதுதான் பராசக்தி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் இணைந்து நடிக்க, கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் மொத்தமாக எவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Parasakthi: கெரியர் பெஸ்ட்.. சிவகார்த்திகேயனின் பராசக்தி பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயனின் பராசக்தி

Published: 

11 Jan 2026 17:36 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) 25வது திரைப்படமாக வெளியாகியுள்ளதுதான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் (Ravi Mohan) மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, டான் பிக்ச்சர்ஸ் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். இந்த படமானது நேற்று 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில், கிட்டத்தட்ட சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டிற்கும் மேல் தயாராகியிருந்தது. 2026ம் ஆண்டி தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான முதல் படமாக இது அமைந்துள்ளது.

அந்த வகையில் வெளியான முதல் நாளில் உலகளாவிய திரையிடலில் மொத்தம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் உலகளாவிய வசூலில் முதல் நாளில் ரூ 27 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இந்த வசூல் விவரம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பராசக்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனம்? வலுக்கும் எதிர்ப்பு – என்ன நடந்தது?

பராசக்தி படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :

மதராஸி படத்தின் முதல் நாள் வசூலை முந்தியதா பராசக்தி :

சிவகார்த்திகேயனின் நடிப்பில் பராசக்தி படத்திற்கு முன் வெளியான திரைப்படம் மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவந்தது. இப்படமானது 2 நாடுகளில் உலகமெங்கும் சுமார் ரூ 50 கோடிகளுக்கு கிட்ட வசூல் சித்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் முடிவில் கிட்டத்தட்ட 23 கோடிகள் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்… என்னனு தெரியுமா?

அந்த விதத்தில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் இப்படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. சுதா கொங்கராவின் இந்த பராசக்தி படம் வெளியான ஒரே நாளில் சுமார் ரூ 27 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையிலே முதல் நாளில் அதிகம் வசூலித்த படம் என பராசக்தி படம் கூறப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டியையை முன்னிட்டு மேலும் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!