Madharasi Box office Collection: மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "மதராஸி" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம், ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியானது. படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் வசூல் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

Madharasi Box office Collection: மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.. மதராஸி முதல் நாள் வசூல் இவ்வளவா?

மதராஸி வசூல் நிலவரம்

Updated On: 

06 Sep 2025 09:28 AM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். மேலும் மலையாள நடிகர் பிஜூ மேனன், “டான்ஸிங் ரோஸ்” ஷபீர், விக்ராந்த் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் ஓணம் பண்டிகை, மிலாடி நபி ஆகிய விசேஷ நாட்களை முன்னிட்டு 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மதராஸி

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகியுள்ள மதராஸி படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர் தோல்வியால் தமிழ் சினிமாவில் கடந்த 5 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு இப்படம் கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அமரன் படத்தினால் உயர்ந்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட், இந்த படத்திலும் அடுத்தக்கட்டத்துக்கு சென்றிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read:  ஆக்‌ஷனில் அசத்தும் சிவகார்த்திகேயன்.. மதராஸி விமர்சனம் இதோ!

சமூக வலைத்தளங்கள் முழுக்க மதராஸி படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விடுமுறை நாட்கள் என்பதால் பெரும்பாலான காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இதனால் மதராஸி படம் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல் எவ்வளவு?


இந்த நிலையில் மதராஸி படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூலை பெற்றிருப்பதாக sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 62.22 சதவிகித டிக்கெட்டுகள் சராசரியாக ஒரு தியேட்டரில் விற்பனை செய்யப்பட்டதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் நிச்சயம் அதிகரிக்கும் என்றும், சிவகார்த்திகேயன் படம் என்பதால் பெண்கள், குழந்தைகள் அதிகளவில் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: AR Murugadoss: மதராஸி படம்.. குழந்தைகளுக்காக பல காட்சிகள் மாற்றம்!

இந்த படத்தில் இடம் பெற்ற ஆக்‌ஷன் காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக அது குறைக்கப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.