Sivakarthikeyan : தமிழகத்தில் முதல் நாள் வசூலில் மிரட்டிய மதராஸி.. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Madhrasi Tamil Nadu first day collection : சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அதிரடி ஆக்ஷன் நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் தற்போது, மதராஸி பட முதல் நாள் தமிழக வசூல் விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Sivakarthikeyan : தமிழகத்தில் முதல் நாள் வசூலில் மிரட்டிய மதராஸி.. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

மதராஸி திரைப்படம்

Published: 

06 Sep 2025 16:44 PM

 IST

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR.Murugadoss) மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) கூட்டணியில் வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைக்க, ஸ்ரீ லட்சுமி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த மதராஸி படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் போன்ற கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக பிஜூ மேனன் மற்றும் வித்யுத் ஜாம்வால் (Vidyut Jammwal) நடித்திருந்தனர். மதராஸி படத்தில் வித்யுத் ஜாம்வாலின் காட்சிகளுக்கு திரையரங்கமே அதிர்ந்தது என்றுதான் கூறவேண்டும்.

சிவகார்த்திகேயனை விடவும் அவரின் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷ்ன் காட்சிகள் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். இந்த படத்தின் வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த படம் தமிழக அளவில் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் செய்தது.

இதையும் படிங்க : அரசியலுக்கு வருவேனா? விஜய் அழைத்தாலும்… – ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்  :

சிவகார்த்திகேயனின் மதராஸி

இந்த மதராஸி திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்த் இணைந்து நடித்திருந்தனர். ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் கஜினி, துப்பாக்கி போன்ற படங்களின் கலவையாக மதராஸி படம் இருக்கும் என ஏ.ஆர். முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதுபோல, இந்த மதராஸி படத்தின் கதையும் சரி, படத்தின் காட்சி அமைப்புகளும் சரி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனின் நடிப்பில் முழுமையாக ஆக்ஷ்ன் படமாக இந்த மதராஸி படம் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனை விடவும் வித்யுத் ஜாம்வாலின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்புகள் கிடைத்திருந்தது.

இதையும் படிங்க : சினிமாவில் 28 ஆண்டுங்களை கடந்த சூர்யா.. வெளியான ஸ்பெஷல் வீடியோ!

இந்த படமானது வெளியாகி முதல் நாளை கடந்திருக்கும் நிலையில், எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ12.8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.