Sivakarthikeyan : எனது அடுத்த படங்கள் இதுதான்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyans Next Projects : சிவகார்த்திகேயன் நடிப்பில், மதராஸி படம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து பராசக்தி படமானது உருவாகி வருகிறது. இந்த படத்தை அடுத்து, இவரின் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படங்கள் பற்றி அவர் பேசியது குறித்து பார்க்கலாம்.

Sivakarthikeyan : எனது அடுத்த படங்கள் இதுதான்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்

Published: 

09 Sep 2025 16:07 PM

 IST

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் காதல் கதை கலந்த திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் மதராஸி படமானது, கடந்த 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வெளியானது. இப்படமானது 2வது நாளில் உலகளவில் சுமார் ரூ 50 கோடியை வசூல் செய்திருந்தது. தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பராசக்தி (Parasakthi) படமானது உருவாகி வருகிறது.

இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவருகிறார். இப்படமானது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து, எந்த இயக்குநர்களுடன் படங்களில் இணையவுள்ளார் என்பது குறித்து, சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார். அந்த லிஸ்ட் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : நடிகை காஜல் அகர்வாலுக்கு விபத்தா? வைரலாகும் எக்ஸ் போஸ்ட்

சிவகார்த்திகேயன் இணையும் அடுத்த படங்களின் லிஸ்ட்

நடிகர் சிவகார்திகேயனின் நடிப்பில் 25வது படமாக பராசக்தி உருவாகிவருகிறது. மேலும் இவரின் 24வது படம் குறித்த எந்தவித அறிவிப்புகளும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் சிபி சக்கரவர்தியுடன் ஒருபடத்தில் நடிக்கவுள்ளேன், அந்த படம் எப்படி வருகிறது என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

இதையும் படிங்க : ஆடியோ லஞ்ச் தேதியை லாக் செய்த இட்லி கடை படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அதுதான் என்னுடைய அடுத்த திட்டமாக இருக்கும். இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு சாரின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன். மேலும் புஷ்கர் காயத்ரியுடன் ஒரு படம் குறித்த டிஸ்கஷன் நடந்து வருகிறது” என்று தனது அடுத்தடுத்த, திரைப்படங்கள் பற்றி சிவகார்த்திகேயன் ஓபனாக தெரிவித்துள்ளார்.

மதராஸி படத்திலிருந்து வெளியான தங்கப்பூவே பாடல் பதிவு

இந்த மதராஸி திரைப்படமானது வெளியாகி 5 நாட்களான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படமானது, ரொமாண்டிக் திரில்லர் என மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. இதில் வில்லனாக நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தற்போது ஓரளவு பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.