இணையத்தில் கவனம் பெறும் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட சின்னதா ஒரு படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Chinnatha Oru padam: தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த வரிசையில் உருவாகியுள்ள சின்னதா ஒரு படம் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட சின்னதா ஒரு படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சின்னதா ஒரு படம்

Published: 

28 Jun 2025 14:23 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தற்போது சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. பெரிய பெரிய நடிகர்கள் நடிக்காமல் பெரிய பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக வெளியாகும் படங்களை விட சிறிய பட்ஜெட்டில் மாஸ் ஹீரோக்களாக இல்லாமல் இருப்பவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இணைய உள்ள அடுத்தப் படமான சின்னதா ஒரு படம் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் (Actro Sivakarthikeyan) தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது, இந்த சின்னதா ஒரு படம் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள அண்ணன் ஜானி டிசோசாவிற்கு எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தின் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ள நடிகர்கள் விதார்த், பிரசன்னா, குரு சோமசுந்தரம், லக்‌ஷ்மி பிரியா, ரோகினி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேஅன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சின்னதா ஒரு படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அறிமுக இயக்குநர் ஜானி டிசோசா எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் டைட்டில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. மேலும் வித்யாசமான தலைப்பைக் கொண்ட இந்தப் படம் 4 வெவ்வேறு சூழலில் நடக்கும் கதைகள் ஒரு புள்ளியில் இணையும் போது என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் கேமியோ ரோலில் நடித்துள்ள நிலையில் நடிகர்கள் பால சரவணம் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Related Stories
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!