Madharaasi : சிவகார்த்திகேயனின் மதராஸி.. முதல் பாடல் புரோமோ குறித்து வெளியான அறிவிப்பு!

Madharaasi Movie First Song Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாராகிவரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தின் முதல் பாடல் குறித்துப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Madharaasi : சிவகார்த்திகேயனின் மதராஸி.. முதல் பாடல் புரோமோ குறித்து வெளியான அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் மதராஸி

Updated On: 

28 Jul 2025 17:43 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss). இவரின் இயக்கத்தில் இறுதியாக இந்தியில் சிக்கந்தர் (Sikandar) என்ற திரைப்படம் வெளியானது. சல்மான்கானின் நடிப்பில் வெளியான இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் இவர் இயக்கி வந்த திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்துள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஏஸ் பட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் (Anirudh Ravichander) இப்படத்தில் இசையமைத்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனின் படத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின், இந்தப் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசையமைப்பில், மதராஸி படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ நாளை 2025, ஜூலை 29ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!

மதராஸி முதல் பாடல் ப்ரோமோ அறிவிப்பு :

அமரன் திரைப்படத்தை அடுத்ததாக சிவகார்த்திகேயன் முற்றிலும் ஆக்ஷ்ன் படமாக, இந்த மதராஸி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. மேலும் இப்படத்தின் சண்டை காட்சிகள் படப்பிடிப்பு சமீபத்தில் இலங்கையில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படமானது தமிழ், தெலுங்குக்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : இட்லி கடை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களுக்கு நடிக்க சொல்லித்தரும் தனுஷ் – வைரலாகும் வீடியோ!

மதராஸி படத்தின் நடிகர்கள் :

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன், முன்னணி நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பிரேம் குமார் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படமானது கஜினி மற்றும் துப்பாக்கி திரைப்படங்களின் கலவையாக உருவாகியிருப்பதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.