மீண்டும் இணைகிறதா சிவகார்த்திகேயனின் மதராஸி கூட்டணி? – வைரலாகும் தகவல்!

Sivakarthikeyan And AR Murugadoss to Reunite: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், இறுதியாக வெளியான படம் மதராஸி. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணைகிறதா சிவகார்த்திகேயனின்  மதராஸி கூட்டணி? - வைரலாகும் தகவல்!

சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ்

Published: 

16 Sep 2025 20:50 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் இதுவரை சுமார் 23 படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த லிஸ்டில் இறுதியாக வெளியான படம்தான் மதராஸி (Madaraasi). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் (AR.Murugadoss) இயக்கியிருக்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் தர்பார் (Darbar) படத்தை இயக்கியிருந்த நிலையில், அந்த படத்தை அடுத்ததாக இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மதராஸி படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின் மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்டரி கொடுத்திருந்தார். இந்த படமானது சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸிற்கு ஓரளவு நல்ல வரவேற்பையே கொடுத்திருந்தது.

இந்த படமானது இரண்டாவது நாளிலேயே உலகளவில் சுமார் ரூ 50 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி, மதராஸி பட கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தியேட்டர்ல தனி ஃபீல்தான்.. ரீ ரிலிசாகும் குஷி படம்.. என்னவெல்லாம் ஸ்பெஷலா இருக்கும்?

சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் காமினேஷனில் மீண்டும் ஒரு புதிய படமானது உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி

ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  மான் கராத்தே என்ற படத்தை  ஏ.ஆ. முருகதாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இவர்கள் இருவரின் காம்போவில் மதராஸி படமானது வெளியாகியிருந்தது. இந்த மதராஸி படமானது காதல், ஆக்ஷ்ன் மற்றும் தேசபக்தி போன்ற வித்தியாசமான கதையில் வெளியாகியிருந்தது. இந்த படமானது மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

இதையும் படிங்க : பராசக்தி பட டைட்டில் விவகாரம்… அதை கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல – விஜய் ஆண்டனி விளக்கம்!

மேலும் இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாம். இந்த படத்தின் கதையை ஏற்கனவே முருகதாஸ் மதராஸி படத்தின் ஷூட்டிங்கின்போது, சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளாராம். இந்த கதை அவருக்கு பிடித்திருந்ததால். இதை தொடர்ந்து இந்த புதிய படமானது உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய எந்த உறுதியளிக்கும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதராஸி வசூல் பற்றி  படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

மதராஸி பட ஓடிடி ரிலீஸ் எப்போது?

ருக்மிணி வசந்த் மற்றும் சிவகார்த்திகேயனின் இந்த மதராஸி படமானது , கடந்த 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் பெற்றிருக்கும் நிலையில், வரும் 2025 அக்டோபர் 2 அல்லது 3 ஆம் தேதியில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.