எனக்கு எல்லா இயக்குநர்களும் நோ சொல்றது அதுக்காகதான் – சிங்கம்புலி ஓபன் டாக்
Singalmpuli Fun Interview Viral On Social Media : தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சிங்கம் புலி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கலகலப்பாக பேசியது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிங்கம்புலி
தமிழ் சினிமாவில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சிங்கம் புலி. பல பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சிங்கம் புலி கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரெட் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சிங்கம் புலி இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மாயாவி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க நடிகை ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார்.
இதில் நடிகையாகவே ஜோதிகா நடித்து இருந்த நிலையில் படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இரண்டு படங்களை மட்டுமே இயக்கி உள்ள சிங்கம் புலி அடுத்தடுத்து நடிகராக பலப் படங்களில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் அனைத்திலும் சிங்கம் புலி கதாப்பாத்திரம் மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
எனக்கு எல்லா இயக்குநர்களும் நோ சொல்றது அதுக்காகதான்:
அதன்படி நடிகர் சிங்கப் புலி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தான். இதில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சிங்கம் புலி நடித்து இருந்தாலும் அவரது எதார்த்தமான பேச்சு காமெடி மக்களிடையே அவரை அதிக அளவில் பிரபலப்படுத்தியது. இந்த நிலையில் சிங்கம் புலி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அந்தப் பேட்டியில் சிங்கம் புலி கூறியதாவது, நான் விக் வைக்கவானு கேட்டா மட்டும் எல்லா இயக்குனர்களும் ‘நோ’ சொல்லிடுவாங்க என்று கலகலப்பாக பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… RJ Balaji: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. கருப்பு படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
இணையத்தில் வைரலாகும் சிங்கம் புலி பேச்சு:
நான் விக் வைக்கவானு கேட்டா மட்டும் எல்லா இயக்குனர்களும் ‘நோ’ சொல்லிடுவாங்க… – நடிகர் & இயக்குனர் சிங்கம்புலி #SingamPuli #TamilCinema #Kollywood #CinemaUpdates #TouringTalkies pic.twitter.com/Cn2F70ujop
— Touring Talkies (@ToouringTalkies) March 17, 2026
Also Read… அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது அரசன் படக்குழு… வைரலாகும் போட்டோ!