Simran : மக்கள் நிச்சயம் அந்த படத்தை விரும்புவார்கள்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து சிம்ரன் பேச்சு!

Simran Talks About Dhruva Natchathiram : தமிழ் சினிமாவில் பிரபல நாயகிகளில் ஒருவர்தான் சிம்ரன். இவரின் நடிப்பில் இறுதியாக டூரிஸ்ட் பேமிலி என்ற படம் வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர் விக்ரமின் துருவநட்சத்திரம் படத்தினை பற்றிப் பேசியுள்ளார். அதை பற்றிப் பார்க்கலாம்.

Simran : மக்கள் நிச்சயம் அந்த படத்தை விரும்புவார்கள்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து சிம்ரன் பேச்சு!

சிம்ரன்

Published: 

09 Jun 2025 16:22 PM

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் அஜித் (Ajith), விஜய் (Vijay)  மற்றும்  சூர்யா (Suriya) எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர் சிம்ரன் (Simran). இவர் 2000ம் ஆண்டு தொடக்கக்காலத்தில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவருக்குத் தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருந்தனர். இவரின் நடனத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் இவர் ஹீரோயினாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு ஜோடியாக நடிகர் சசிகுமார் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதியில் பெரிய பட்ஜெட் படங்களுடன் இணைந்து வெளியானது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை சிம்ரன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய இவர் கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram ) படம் வெளியீடு குறித்தும், படத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார். அதை விவரமாகப் பார்க்கலாம்.

நடிகை சிம்ரன் துருவநட்சத்திரம் படத்தை பற்றி பேசிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சந்தித்த சிம்ரனிடன் துருவ நட்சத்திரம் படத்தினை குறித்தும், அதன் ரிலீஸ் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை சிம்ரன், ” துருவ நட்சத்திரம் திரைப்படமானது முழுக்க ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், மேலும் அப்படம் மிகவும் ஸ்டைலான படம் கூட என்று சொல்லலாம். அந்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீசிற்குத்தான் நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம். மேலும் இப்படமானது சரியான நேரத்தில் வெளியாகும். விக்ரமின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படமானது மக்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்” என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

துருவ நட்சத்திரம் திரைப்படம் :

சியான் விக்ரம் நடிப்பில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் முன்னே தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை நடிகரும், இயக்குநருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

விக்ரமின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன் , ராதிகா சரத்குமார், சிம்ரன் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கூடிய இப்படம் நிச்சயமாக இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.