Simran: என்னோட முதல் ரிஜெக்ஷன் அதுதான்.. உண்மையை உடைத்த சிம்ரன்!

Simran About Her First Rejection : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாகில் ஒருவராக இருந்து வந்தவர் சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரின் முதல் ரிஜெக்ஷன் என்ன என்பது பற்றி சிம்ரன் பேசியுள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

Simran: என்னோட முதல் ரிஜெக்ஷன் அதுதான்.. உண்மையை உடைத்த சிம்ரன்!

சிம்ரன்

Published: 

19 Sep 2025 08:00 AM

 IST

90கள் மற்றும் 2000ம் ஆண்டு காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தவர் சிம்ரன் (Simran). இவரின் நடிப்பில் தமிழ் மொழியை தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இவர் தமிழில் உச்ச நட்சத்திரங்களான தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு நடிகர்களுக்கும் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில், இவர் தற்போது படங்களில் சிறப்பு வேடம் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family).

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சசிகுமாரின் மனைவி வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவருக்கு தொடர்ந்து, புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய சிம்ரன் தனது முதல் ரிஜெக்ஷன் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நிலவையே கொடுப்பதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமட்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்

நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

தனது முதல் ரிஜெக்ஷன் பற்றி நடிகை சிம்ரன் பகிர்ந்த விஷயம் :

நேர்காணலில் தொகுப்பாளர் சிம்ரனிடம் , முதன் முதலில் நீங்கள் ரிஜெக்ட் செய்யப்பட்டதை எப்படி பார்த்தீங்க? என்பதை பற்றி கேட்டிருந்தார். தெற்கு பதிலளித்த சிம்ரன், “அனைத்திலும் ரிஜெக்ஷன் இருக்கு, எனது வாழ்க்கையில் கொஞ்சம் விமர்சனமாக எழுந்த முதல் ரிஜெக்ஷன் என்றால் அது ஒரு விளம்பரத்தில் நடித்துதான். மேலும் ஒரு நிராகரிப்புதான் உங்களின் முன்னேற்றத்தின் முதல் படியாகும். எனக்கு ஆரம்பத்தில் தமிழ் மொழியே சரியாக வராது.

இதையும் படிங்க : நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்

முன்பு நான் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தேன், அது 1997ல் நடந்தது. அதுதான் எனது முதல் ரிஜெக்ஷன். ஒரு கோல்கேட் விளம்பரத்தில் நடிக்க கூப்பிட்டு இருந்தார்கள். அது இந்தி மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவானது. முதலில் நான்தான் 2 மொழிகளிலும் நடிப்பதாக இருந்தது. பின் இன்னொரு நடிகையை கூட்டிவந்து தமிழில் நடிக்கவைத்தார்கள்.

நான் அப்போது கேட்டேன் என் இவ்வாறு என்று, அதற்கு அவர்கள் உங்களுக்கு தமிழ் சரியாக தெரியாது என்பதால் இவ்வாறு நாங்கள் தமிழுக்கு புதிய நடிகையை நடிக்கவைத்தோம் என அவர்கள் கூறினார்கள்” என நடிகை சிம்ரன் தனது முதல் நிராகரிப்பு குறித்து மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.