தங்களின் ஜன நாயகக் கடமையை செய்த சிலம்பரசன், விஷால் மற்றும் சிம்ரன்!

Celebrity Voting in 2026 TN Assembly Elections: தமிழகத்தில் இன்று 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் காலை முதலே நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவருகிறார்கள். அந்த விதத்தில் நடிகர்கள் சிலம்பரசன், விஷால் மற்றும் நடிகை சிம்ரன் போன்ற நடிகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

தங்களின் ஜன நாயகக் கடமையை செய்த சிலம்பரசன், விஷால் மற்றும் சிம்ரன்!

சிலம்பரசன், விஷால் மற்றும் சிம்ரன்

Updated On: 

23 Apr 2026 17:30 PM

 IST

ஒட்டுமொத்த தமிழகமே இன்று பரபரப்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக (2026 Assembly Elections) தங்களின் வாக்குகளை செலுத்திவருகின்றனர். அந்த வகையில் இன்று (23/04/2026) அதிகாலை முதலே தல அஜித் குமார் முதல் பல்வேறு உச்ச பிரபலங்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை செய்துவருகிறார்கள். தளபதி விஜய் (thalapathy Vijay), சூர்யா (Suriya), ரஜினிகாந்த் (Rajinikanth), கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல்வேறு நடிகர்களும் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர். மேலும் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாக்குகளை செலுத்தியிருந்தனர். அந்த விதத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan), தனது ஜனநாயகக் கடமையை சிறப்பாக செய்துள்ளார். அவர் சென்னை தியாகராயநகர் வாக்குச்சாவடியில் தனது, வாக்கை செலுத்தியுள்ளார்.

மேலும் வாக்கை செலுத்திவிட்டு, தனது ஆள்காட்டி விரலை காட்டியிருந்தார். மேலும் இவரோடு நடிகர்கள் விஷால் மற்றும் சிம்ரன் உட்பட பல்வேறு பிரபலங்களும் தங்களின் பொன்னான வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 2026 தமிழக தேர்தல்.. வாக்குகளை செலுத்திய சின்னத்திரை பிரபலங்கள் யார்? லிஸ்ட் இதோ!

நடிகர் சிலம்பரசன் வாக்களித்தது குறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ:

மேலும் தமிழ் நடிகர் விஷாலும்(Vishal) தனது வாக்கை செலுத்தியுள்ளார். அவர் தனது சைக்கிள், சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, தனது வாக்கை செலுத்தியிருந்தார். அவர் மகுடம் படத்தின் ஷூட்டிங்க்காக காக்கிநாடாவிற்கு சென்றிருந்த நிலையில், தனது ஜன நாயகக் கடமையை செய்வதற்காகவே வந்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காமெடியாக பேசியும், அனைவரும் நிச்சயமாக வாக்குகளை செலுத்தவேண்டும் என்றும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் பேசியது தொடர்பான வீடியோ:

இதையும் படிங்க: தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பிரபல மலையாள நடிகர்

தனது வாக்கு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

நடிகை சிம்ரனும் (Simran) தனது வாக்கை செலுத்தியுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் அவர், “டிராமாவை தவிர்த்து, யதார்த்தத்தில் கவனம் செலுத்துவோம். இது ஒரு வாக்குச்சாவடி, சினிமா ஷூட்டிங் அல்ல, வாக்களிக்கவரும்போது அனைவரும் ஒன்றே. வாக்களிப்பது என் உரிமை மட்டுமல்ல, அது என் பொறுப்பும் கூட” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..