Shanthnu Bhagyaraj: நான் யாரையும் குறைசொல்ல விரும்பல.. மாஸ்டர் படத்தில் நடித்து அதற்காகத்தான்- சாந்தனு பாக்யராஜ் பேச்சு!
Shanthnu About Master Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ், பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில், தனது கதாபாத்திரம் வரவேற்பு இல்லாதது பற்றி சாந்தனு ஓபனாக பேசியுள்ளார்.

தளபதி விஜய் மற்றும் சாந்தனு
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வந்தவர் பாக்கியராஜ். இவரின் மகன்தான் நடிகர் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu Bhagyaraj). தனது தந்தையை போல, நடிகர் சாந்தனுவும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடிக்க தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்து வந்தார். பின் இவர் ஹீரோவாக அறிமுகமான படம்தான் சக்கரக்கட்டி (Sakkarakatti). கடந்த 2008ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கலா பிரபு இயக்கியிருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவுதான் வரவேற்பை கொடுத்திருந்தது. தற்போது இவர் சினிமாவில் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு கடத்திருக்கும் படம்தான் பல்டி(Balti).
மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தின் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய சாந்தனு , தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில், தனது கதாபாத்திரம் வரவேற்பு இல்லாத காரணம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : 71வது தேசிய விருதுகள் நிகழ்ச்சி… 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை பெரும் பிரபலங்கள்!
மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய சாந்தனு :
சமீபத்தில் நேர்காணலில் பேசிய சாந்தனு, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், “மாஸ்டர் படத்தின் ரிலீஸை தொடர்ந்து பலபேர் என்னிடம் கேட்டார்கள், லோகேஷ் மற்றும் விஜய் அண்ணாவின் நண்பன் நீங்க, உங்க கதாபாத்திரம் ஏன் இப்படி குறைவான நேரம் மட்டுமே வருகிறது என கேட்டார்கள். நான் என்ன நினைத்தேன், அந்த கதைக்கு என்ன தேவையோ, அதை லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு இடம் அவ்வளவுதான் கொடுக்கவேண்டும் என்றால், அது இயக்குநருடைய முடிவு. மாஸ்டர் படத்திற்காக அதிக நாள் ஷூட் பண்ணினோம், அது எல்லாமே கதையுடன் ஒட்டவைக முடியாதது.
இதையும் படங்க : ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு – வைரலாகும் போட்டோஸ்
சாந்தனு பாக்யராஜின் இன்ஸ்டாகிராம் பதிவு :
ஒரு படத்திற்கு என்ன தேவையோ அது மட்டும்தான் சேர்க்கமுடியும். எனக்காக ஏன் அந்த படத்தை வீணாக்க வேண்டும். மேலும் லோகேஷ் கனகராஜ் தப்பு சொல்லமுடியாது, விஜய் அண்ணாவையும் குற்றம் சொல்ல முடியாது. லோகேஷ் கனகராஜ்தான் என்னை அழைத்தார். மேலும் விஜய் அண்ணா இதன் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்குமே என நினைத்தார் அவ்வளவுதான். இவ்வாறு நினைத்தது நடக்கவில்லை என்றால் இதைவிட சிறப்பாக ஒன்னு வரும் என விஜய் அண்ணா என்னிடம் கூறினார்” என நடிகர் சாந்தனு, அந்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார்.