‘தனுஷ் மேனேஜர் குறித்து நான் அப்படி சொல்லவில்லை’.. சீரியல் நடிகை மான்யா ஆனந்த் விளக்கம்
Serial Actress Maanya Anand: கோலிவுட் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி என்பது தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் சீரியல் நடிகை மான்யா ஆந்திடம் சினிமா வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியதாக வெளியான செய்து குறித்து நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

மான்யா ஆனந்த், ஸ்ரேயஸ், தனுஷ்
சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக புதிதாக வாய்ப்புகள் தேடி சினிமாவிற்கு வரும் பெண்களில் பெரும்பாலோனோர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை சந்தித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். இது சினிமா ஆரம்பித்ததில் இருந்தே நடக்கும் ஒன்றாகவே உள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பல விசயங்களை சினிமா துறையில் உள்ளவர்கள் முன்னெடுத்துக்கொண்டே இருந்தாலும் துன்புறுத்தல்கள் குறைந்ததா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் சூழலில் தான் சீரியல் நடிகை ஒருவர் பிரபல நடிகர் தனுஷ் மற்றும் அவரது மேனேஜர் ஸ்ரேயஸ் குறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவி சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களிடமும் ரசிகர்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப் போலே என்ற சீரியல் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் தான் நடிகை மான்யா ஆனந்த். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயஸ் என்ற பெயரில் ஒருவர் பேசியதாகவும் படம் ஒன்று தொடங்க உள்ளோம். அந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சில அட்ஜெஸ்ட்மெண்ட்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முடியாது என்று நடிகை மான்யா ஆனந்த் கூறிய பிறகும் அந்த நபர் தனுஷ் சார் என்றாலும் முடியாதா என்று கேட்க மான்யா படத்திற்கான நான் அப்படி எல்லாம் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மான்யா ஆனந்த்:
இந்த நிலையில் நடிகை மான்யா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் பேசிய முழு வீடியோவில் யாரோ ஒருவர் தனுஷ் சாரின் பெயரையும் அவரது மேனேஜர் பெயரையும் தவராக பயனப்டுத்துகிறார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால் எனது வீடியோவை முழுமையாக பார்க்காமல் பாதி மட்டுமே பார்த்துவிட்டு விழிப்புணர்விற்காக நான் சொன்ன விச்யத்தை குற்றச்சாட்டாக மாற்றியுள்ளனர். அது பொய்யான நபராக இருக்கும் என்று தான் தெரிவித்து இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
Also read… பிக்பாஸில் ஃபன் டாஸ்கில் கூட போட்டியாளர்கள் இடையே இவ்வளவு வன்மமா? வைரலாகும் வீடியோ
நடிகை மான்யா ஆனந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Also read… அது நான் இல்லை… என் போன் நம்பரும் இல்லை – ஸ்ரேயா சரண் பெயரில் நடந்த மோசடி!