Freedom : மீண்டும் இலங்கைத் தமிழராக சசிகுமார்.. ஃப்ரீடம் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Freedom Movie Shooting Wraped : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தைத் தொடர்ந்து இவர் நடித்துவந்த படம்தான் ஃப்ரீடம். இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகிவந்த இப்படத்தின் ஷூட்டிங் முழுமையான நிறைவடைந்துள்ளது. இதைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Freedom : மீண்டும் இலங்கைத் தமிழராக சசிகுமார்.. ஃப்ரீடம் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

சசிகுமாரின் பிரீடம் படக்குழு

Published: 

24 Jun 2025 16:32 PM

 IST

நடிகர் சசிகுமாரின்  (Sasikumar) நடிப்பிலும் சரி, இயக்கத்திலும் சரி தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கத்தில் வெளியான இப்படமானது , ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமாரை நடித்து வந்த திரைப்படம்தான் ப்ரீடம் (Freedom). இந்த திரைப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர் சத்யசிவா (Sathyasiva) இயக்கியுள்ளார். இவர் தமிழில் கழுகு, சிவப்பு மற்றும் சவாலே சமாளி என சில படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் ஃப்ரீடம். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose) இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தின் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2025, ஜூன் 23ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டியுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஷூட்டிங் நிறைவு தொடர்பாக ஃப்ரீடம் படக்குழு வெளியிட்ட பதிவு :

ஃப்ரீடம் திரைப்படம் :

இந்த படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்க, விஜய கணபதி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது சசிகுமாரின் நடிப்பில், அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் இருவரும் இலங்கை அகதிகள் வேடத்தில் நடித்துள்ளனர். சசிகுமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருந்த நிலையில்,  இந்த ஃப்ரீடம் படமும் அதே கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், சரவணன், ரமேஷ் கண்ணன்,  ராமசாமி என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஃப்ரீடம் படத்தின் ரிலீஸ் எப்போது?

சசிகுமாரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த ஃப்ரீடம் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. சசிகுமாரின் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்தது வருகிறார். இந்த படத்தின் டீசர் கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஜூலை 10ம் தேதியில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் நிறைவடைந்த நிலையில், இதன் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்