Kombuseevi: சரத்குமார் – சண்முகபாண்டியனின் அதிரடி.. வெளியானது ‘கொம்புசீவி’ டீசர்!
Kombuseevi Movie Teaser :தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சண்முக பாண்டியன். இவர் மற்றும் சரத்குமாரின் முன்னணி நடிப்பில் தயாராகிவரும் படம்தான் கொம்புசீவி. இப்படமானது அதிரடியாக தயாராகிவரும் நிலையில், படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

கோலிவுட் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகராக இருந்து, பல ஹிட் படங்களை கொடுத்தவர் சரத்குமார் (Sarathkumar). அந்த வகையில், இவர் தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக 3BHK என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தின் அப்பா வேடத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் ஆக்ஷ்ன் மற்றும் அசத்தல் வீரனாக நடித்திருக்கும் படம் கொம்புசீவி (Kombuseevi). இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் (Shanmuga Pandian) முன்னணி ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் சரத்குமாரும் இணையான வேடத்தில் நடித்துள்ளார். இந்த கொம்புசீவி திரைப்படத்தை இயக்குநர் பொன்ராம் (Ponram) இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது.
அந்த விதத்தில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தனி ஒருவன், வேலைக்காரன் படங்களை புகழ்ந்த ரசிகர்… மோகன் ராஜா வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்ட கொம்புசீவி திரைப்படத்தில் அசத்தல் டீசர் பதிவு :
Virtual Veerargaley, Assemble 😎#Kombuseevi teaser is here – Raw, Real and Full-on Madness!
🔗 https://t.co/xYLe9He7hY@realsarathkumar & @ShanmugaP_Actor #Tharnika#Kombuseevi #OnceUponATimeInUsilampatti
A @ponramVVS Direction pic.twitter.com/ZbCDHVuoXm
— Shanmuga Pandian (@ShanmugaP_Actor) October 11, 2025
கொம்புசீவி திரைப்படத்தின் கதைக்களம் என்ன :
இந்த கொம்புசீவி திரைப்படமானது, மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த, வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான கதைங்கலத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சண்முக பாண்டி ” பாண்டி” என்ற கதாபாத்திரத்திலும், சரத்குமார் “ரொக்கப்புலி” என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?
இந்த படமானது உண்மையான சம்பவத்தில், அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காமெடி கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், விரைவில் புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொம்புசீவி திரைப்படம் குறித்து சரத்குமார் வெளியிட பதிவு :
Virtual Veerargaley, Assemble 😎#Kombuseevi teaser is here – Raw, Real and Full-on Madness!
🔗 https://t.co/PPVJ1reYfi@realsarathkumar & @ShanmugaP_Actor #Tharnika#Kombuseevi #OnceUponATimeInUsilampatti
A @ponramVVS Direction
Produced By @StarCinemas_ @mukesh_chelliah
A…
— R Sarath Kumar (@realsarathkumar) October 11, 2025
இந்த கொம்புசீவி திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படம் மொத்தமாக சுமார் ரூ 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025 நவம்பர் மாதத்தின் இறுதிக்குள் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படக்குழு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.