AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OTT Update : சந்தானத்தின் கலக்கல் திரில்லர்.. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

DD Next Level Movie OTT Release Update : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்த சந்தானம், தற்போது முன்னணி நடிகராகப் படங்களில் நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ஹாரர் மற்றும் காமெடி படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

OTT Update : சந்தானத்தின் கலக்கல் திரில்லர்.. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
டிடி நெக்ஸ்ட் லெவல் படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Jun 2025 16:57 PM IST

நடிகர் சந்தானம் (Santhanam) என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது அவரின் டைமிங் காமெடிதான் (Timing comedy). அந்த அளவிற்கு இவரின் நகைச்சுவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்றே கூறலாம். அந்த விதத்தில் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகர் சிலம்பரசனின் (Silambarasan)  நடிப்பிலும், இணை இயக்கத்திலும் உருவான மன்மதன் (Manmadhan)  என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் சிலம்பரசனின் நண்பனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் மேலும் பல நடிகர்களுடன் படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். விஜய் முதல் அஜித் வரை பல பிரபலங்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து இவர் ஹீரோவாகவும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level).

இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த்  (S. Prem Anand) இயக்கியிருந்தார். ஹாரர் மற்றும் காமெடி கதைக்களத்துடன் இப்படமானது கடந்த 2025 மே 16ம் தேதியில் வெளியானது. இந்த படத்தில் சந்தானம் முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது. இப்படமானது வரும் 2025, ஜூன் 13ம் தேதியில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் பதிவு :

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் வெற்றி பெற்றதா..?

நடிகர் சந்தானத்தின் இந்த படமானது கடந்த 2025 மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தை, நடிகர் ஆர்யாதான் தயாரித்திருந்தார். இந்த படத்துடன் நடிகர் சூரியின் மாமன் படம் வெளியானது. இந்த படமானது எமோஷனல் மற்றும் குடும்ப திரைப்படமாக அமைந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீசை வெகுவாக பாதித்தது என்றே கூறலாம்.

மேலும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, மாமன் படத்திற்கு பெரும் வரவேற்பு சென்ற நிலையில், வசூல் ரீதிக்காக இப்படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது என்றே கூறலாம்.

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் நடிகர்கள் :

இந்த படத்தில் சந்தனத்துடன் நடிகர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், யாசிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை கீதிக்கா திவாரி இணைந்து நடித்திருந்தார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் நடிகையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025, மே 16ம் தேதியில் வெளியான இப்படமானது மொத்தமாக ரூ. 14. 95 கொடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படமானது வெளியாகி 4 வாரங்களான நிலையில், வரும் 2025, ஜூன் 13ம் தேதி முதல் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us