DD Next Level: மீண்டும் வெடித்த பாடல் சர்ச்சை.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!
Santhanams Kissaa 47 Song Controversy : கோலிவுட் சினிமாவில் காமெடியனாக நுழைந்து, தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் சந்தானம். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தில் கிஸ்ஸா 47 என்ற பாடல் தொடர்பான சர்ச்சை சமீபகாலமாக எழுந்து வரும் நிலையில், அது தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நடிகர் சந்தானத்தின் (Santhanam) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் டிடி நெக்ஸ்ட் லெவல் (DD Next Level). இந்த படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் (S. Prem Anand)இயக்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்யா (arya) தயாரித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சமயத்தில் இந்த படத்தின் மீது சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது இந்த படத்தில் “கிஸ்ஸா 47” (Kissa 47) என்ற பாடல் தொடர்பான புகார் எழுந்துள்ளது. இது குறித்து பாஜக உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் (Trustee of Tirumala Tirupati Devasthanam) மற்றும் குழு உறுப்பினரும் பானு பிரகாஷ் ரெட்டி (Bhanu Prakash Reddy) புகார் அளித்திருந்தார். இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம் பெரும் கிஸ்ஸா 47 படலானது “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்ற பாடலை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து இந்த பிரச்னைகள் எழுந்த நிலையில், ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த கிஸ்ஸா 47 பாடல் கடந்த 2025, பிப்ரவரி மாதம் 26ம் தேதியில் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீசிற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில். தற்போது இந்த சர்ச்சைக்குரிய பாடலை யூடியூபில் இருந்து நீக்கவும் மற்றும் நஷ்ட ஈடாக ரூ. 100 கோடியைக் கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் மற்றும் பாஜக உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி அனுப்பியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
பாடல் சர்ச்சை தொடர்பாகச் சந்தனம் கொடுத்த பதில் :
நடிகர் சந்தானம், இந்த சர்ச்சைக்குக் கொடுத்த விளக்கம், நான் கிண்டல் செய்யும் விதமாக எதுவும் செய்யவில்லை. நிறைய பேர் நிறைய விஷயங்களைக் கூறுவார்கள், அது அவர்களின் சஜஷன். பார்க்கிறவர்கள் பலரும் இது சரியில்லை, அதை மாற்றியிருந்தால் நன்றாக இருக்கும் என கூறுவார்கள். அத தகவல்களை எல்லாம் நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. கோர்ட் என்ன சொல்கிறது மற்றும் சென்சார் சர்டிபிகேட் என்ன சொல்லுகிறது ஒரு விதிமுறைகள் இருக்கிறது.
அதை மட்டும்தான் தமிழ் சினிமாவில் பண்ணமுடியும். போறவங்க, வாறவங்க சொன்ன நம்ம எதுவும் செய்யமுடியாது. நாங்கள் கோர்ட் சட்டம் மற்றும் சினிமாவில் சென்சார் சொல்லித்தான் எல்லாம் பண்ண முடியும், சிலர் சொல்கிறார்கள் என்று பண்ணமுடியுமா? என்று நடிகர் சந்தானம் கூறியிருந்தார்.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு வெளியிட்ட பதிவு :
2 Days to go !#DevilsDoubleNextLevel ⚡#DevilsDoubleNextLevelFromMay16@arya_offl @TSPoffl @NiharikaEnt @iampremanand @menongautham @selvaraghavan @geethika0001 @KasthuriShankar @iamyashikaanand #Maran #MottaRajendran @ofrooooo @dopdeepakpadhy @barathvikraman @onlyartmohan… pic.twitter.com/loIucZP3Lz
— Santhanam (@iamsanthanam) May 14, 2025
நடிகர் சந்தானத்தின் இந்த படமானது முட்டிலும் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இதை ஆர்யா தயாரிக்க, இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ரோஹித் ஆபிரகாம் இசையமைத்துள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 16ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் சிறப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.