Sanjay Dutt : லியோவில் லோகேஷ் என்னை வீணடித்துவிட்டார்.. நடிகர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு!

Sanjay Dutt Says He Is Angry With Lokesh Kanagaraj : பிரபல நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். இவர் சமீபத்தில் KD என்ற திரைப்படத்தின் தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய அவர். லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் பெரிய கதாபாத்திரம் கொடுக்காததாக, அவர் மீது கோபத்தில் உள்ளதாகப் பேசியுள்ளார். இது பற்றிப் பார்க்கலாம்.

Sanjay Dutt : லியோவில் லோகேஷ் என்னை வீணடித்துவிட்டார்.. நடிகர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு!

லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சஞ்சய் தத்

Published: 

12 Jul 2025 16:48 PM

பிரபல தமிழ் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் லியோ (Leo). இந்த படத்தில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி, மடோனா செபஸ்டியன், மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, பெரும் வசூலை பெற்ற தமிழ் திரைப்படமாகவும் அமைந்திருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய்யின் தந்தை ஆண்டனி தாஸ் வேடத்தில், நடிகர் சஞ்சய் தத் (Sanjay Dutt) நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் KD என்ற கன்னட படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், லியோ படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்தது பற்றியும், லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருப்பது பற்றியும் பேசியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் லோகேஷ் கனகராஜ் குறித்து பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சஞ்சய் தத்திடம் லியோ படத்தில், தளபதி விஜய்யுடன் பணியாற்றியது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகர் சஞ்சய் தத், “நான் தளபதி விஜய்யுடன் பணியாற்றியது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மேலும் நான் லோகேஷ் மீது கோபத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் அவர் லியோ படத்தில் எனக்குப் பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார்” என நடிகர் சஞ்சய் தத் நிகழ்ச்சி மேடையில் ஓபனாக பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் சஞ்சய் தத் சொன்னது சரியா என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ‘தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அற்புதமாக வந்திருக்கிறது’ – தயாரிப்பாளர் கொடுத்த தகவல்!

நடிகர் சஞ்சய் தத் பேசிய வீடியோ :

லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படம் :

லியோ படத்தை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினிகாந்த்துடன் கூலி திரைப்படத்தின் இணைந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்தது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் சார் கூலி பட ஷூட்டிங்கில் ரொம்ப கூல்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு!

இதைத் தொடர்ந்து இப்படமானது இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வந்த நிலையில், படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இதில் ரஜினிகாந்த்துடன் நடிக்கிறாள் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், அமீர்கான், ஸ்ருதி ஹாசன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.