Rajinikanth’s Coolie: சூப்பர் ஹிட்டான மோனிகா பாடல்.. சாண்டி மாஸ்டர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
Sandy Masters Posted About Monica Song : நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. பூஜா ஹெக்டேவின் இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்பாடலின் நடன பயிற்சியாளர் சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி பதிவைப் பகிர்ந்துள்ளார்.

பூஜா ஹெக்டே மற்றும் சாண்டி மாஸ்டர்
கோலிவுட் சினிமாவில் வரும் 2025 ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸிற்கு காத்திருக்கும் படம் கூலி (Coolie). ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி வரும் இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Knagaraj) இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்துள்ளார். இந்த படமானது ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிகர்கள் நாகார்ஜுனா , ஆமிர்கான், உபேந்திர ராவ், சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா (Monica) பாடல் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hgede) சிறப்பு நடனமாடியிருந்தார். இப்பாடலுக்கு நடனப் பயிற்சி கலைஞராக சாண்டி மாஸ்டர் (Sandy Master), நடனம் அமைத்திருந்தார். இந்நிலையில் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சி பதிவை சாண்டி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : லண்டனில் நடக்கும் மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போது தெரியுமா?
சாண்டி மாஸ்டர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி :
அந்த பதிவில் நடன பயிற்சியாளர் , “மோனிகா பாடலை ரசித்த அனைவருக்கும் நன்றி, இந்த அற்புதமான வெற்றிப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நடிகர் சௌபின் ஷாஹிர் சாரின் அற்புதமான நடிப்பு பற்றி நாம் அனைவரும் தெரிந்ததே, ஆனால் இன்று அவரது நடனத் திறமையை அறிந்து கொள்வது சரவெடி. மோனிகா பாடலுக்கு நடனமாடியதற்குப் பூஜை ஹெக்டே மேடமிற்கு நன்றி. மேடம், நீங்கள் ஒரு அற்புதமான ஸ்டைலான நடனக் கலைஞர், உங்களுடன் பணியாற்றிய அனுபவம் அருமை மேடம் “என நடன பயிற்சியாளர் சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!
மோனிகா பாடல் பதிவு :
Monica, My dear Monica! 😍
The second single #Monica from #Coolie starring @hegdepooja💃🏻 is out now!▶️ https://t.co/UHACTjGPWg#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #SoubinShahir @iamSandy_Off #Sublahshini @AsalKolaar @iamnagarjuna… pic.twitter.com/AnM17WjgRL
— Sun Pictures (@sunpictures) July 11, 2025
நடிகை பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியான இந்த மோனிகா பாடலானது இதுவரை சுமார் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான படங்களிலே இந்த கூலி திரைப்படத்தில் மட்டும்தான், அவர் சிறப்புப் பாடலை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.