புது படத்தில் இணைந்த கவின் – சாண்டி.. ரசிகர்களிடையே வைரலாகும் அறிவிப்பு வீடியோ!
Sandy joins cast in Kavin09 Movie: சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கவின். இவரின் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படம்தான் கவின்09. தற்போது இப்படத்தில் பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி இணைந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கவின்09 திரைப்படம்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் நடிகராக நடித்து பின், சினிமாவில் கதாநாயகனாக பிரபலமாகிவருபவர்தான் கவின் (Kavin). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கிஸ் (Kiss). இப்படம் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த கவின், இதையடுத்து புது புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் கனா காணும் காலங்கள் ((kana kaanum kaalangal) தொடரின் இயக்குநர் கென் ராய் (Ken Royson) இயக்கத்தில் இவர் நடித்துவரும் படம்தான் கவின்09 (Kavin 09).
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) நடித்துவரும் நிலையில், இப்படத்தில் பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி (Sandy) இணைந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நகைச்சுவை படங்களில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
சாண்டி படத்தில் இணைந்தது குறித்த கவின்09 படக்குழு வெளியிட்ட அறிவிப்பு வீடியோ:
Meet the boys of #Kavin09 ❤️🔥
Team #ThinkStudios welcomes our dearest @iamSandy_Off onboard to the #Kavin09 family ✨@Kavin_m_0431 @priyankaamohan@kenroyson_ @ofrooooo @ThinkStudiosInd #Kavin #KenRoyson pic.twitter.com/8wuzB5rVN9— Think Studios (@ThinkStudiosInd) January 17, 2026
கவின் மற்றும் சாண்டி இருவரும் கடந்த பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் இணைந்து கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் இவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்தனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் பிக் பாஸிற்கு பின் மீண்டும் புது படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த கவின்09 படமானது நட்பு மாற்றம் காதல் இரண்டிற்கும் இடையே நடக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் கென் ராய் இயக்க, திங் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க : அது என்னை ரொம்பவே பாதிக்கிறது.. மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஆப்ரோ இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுவந்தது. அதை தொடர்நது இப்படம் இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.