Samantha: சூர்யாவை அந்த படத்தின்போது பார்த்து பயந்துவிட்டேன்.. ஆனால் – நடிகை சமந்தா ஓபன் டாக்!

Samantha About Suriya: தென்னிந்திய சினிமாவில் நாயகியாக படங்களில் நடித்தவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் சமீபத்தில் இயக்குநர் ராஜ்நிதி மோரு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் சூர்யாவின் நடிப்பு திறமை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Samantha: சூர்யாவை அந்த படத்தின்போது பார்த்து பயந்துவிட்டேன்.. ஆனால் - நடிகை சமந்தா ஓபன் டாக்!

சூர்யா மற்றும் சமந்தா

Published: 

05 Dec 2025 08:30 AM

 IST

நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது “மா இன்டி பங்கராம்” (Maa Indi Bangaram) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தை ஹோ பேபி படத்தை இயக்கிய பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandini Reddy) இயக்கிவருகிறார். இந்த படத்தில் சமந்தா அதிரடி ஆக்ஷன் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி (Bana Kaththadi) என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தார். அதற்கு முன் இவருக்கு முதல் படமாக அமைந்தது மாஸ்கோவின் காவேரி என்றபடம்தான். ஆனால் இப்படம் பானா காத்தாடி படத்திற்கு பிறகுதான் வெளியாகியிருந்தது.

இவர் தொடர்ந்து தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவந்தார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, நடிகர் சூர்யாவுடன் (Suriya) 24 திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: இயக்குநர் மகன் டூ தமிழ்நாட்டின் தளபதி.. நாயகனாக விஜய் கடந்துவந்த 33 ஆண்டுகள்!

நடிகர் சூர்யா குறித்து சமந்தா ரூத் பிரபு வெளிப்படையாக சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய நடிகை சமந்தா ” 24 திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது, காலையில் என்னுடன் ரோமெண்டிக் காட்சியில் இணைந்து நடிச்சாரு. பின் மதியம் பார்த்தல் ஆதித்யா வேடத்தில் வந்தாரு, நான் அவரை பார்த்து பயந்துவிட்டேன், நிஜமாகவே பயந்துவிட்டேன். சூர்யா மிகவும் திறமையான மனிதர். இதுவரை நான் நடித்த படங்களில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆதித்யா கதாபாத்திரம் மிகவும் சிறப்பான ரோல்” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் கருப்பு. இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள நிலையில், சூர்யா ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடன நிகழ்ச்சி போட்டியாளர் டூ பான் இந்திய குயின்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரிகிறதா?

இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் மேலும் ஒரு திரைப்பட நகரம் - வெளியான அறிவிப்பு
தமிழ்நாட்டில் கட்டப்பட்ட உலகின் முதல் ஏலியன் கோவில் - அப்படி என்ன ஸ்பெஷல்?
தடைகளை வென்று மருத்துவரான 3 அடி மனிதர் - அவரது வெற்றிக்கான காரணம் இதுதான்
இறந்த பிறகும் 57 வருடங்களாக எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்