மா இண்டி பங்காரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி கொண்டாடிய சமந்தா – வைரலாகும் வீடியோ

Samantha Ruth Prabhu Celebraed Holi on Maa Inti Bangaaram Movie Set: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பி தற்போது உருவாகி வரும் படம் மா இண்டி பங்காரம்.

மா இண்டி பங்காரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி கொண்டாடிய சமந்தா - வைரலாகும் வீடியோ

சமந்தா ரூத் பிரபு

Published: 

04 Mar 2026 16:45 PM

 IST

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாய படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நடிகை சம்ந்தா ரூத் பிரபு நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் பெரிய அளவில் இல்லை. அதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாய படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நாயகியாக நடித்தார் சமந்தா ரூத் பிரபு. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிதார். அதனைத் தொடர்ந்து இந்தி மொழியிலும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் நாயகியாக அறிமுகமான முதல் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே முடிவடைந்தது. இவர்கள் இருவரும் ஒத்த மனதுடன் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே கவலை அளித்தது.

விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தா ரூத் பிரபு உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதனைத் தொடர்ந்து சமந்தா ரூத் பிரபு புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரிக்கத் தொடங்கினார். இவரது தயாரிப்பில் வெளியான சுபம் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது நடிகை சமந்தா முன்னணி வேடத்தில் நடித்து வரும் மா இண்டி பங்காரம் என்ற படத்தினையும் அவரது தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வருகின்றது.

மா இண்டி பங்காரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி கொண்டாடிய சமந்தா:

இந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர் ராஜ் நிதி மோருவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சமந்தா தனது மா இண்டி பங்காரம் படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இதில் சமந்தா அனைவரின் மீதும் கலர் தண்ணீர் அடிக்கும் வீடியோ இணையத்ஹில் வைரலாகி வருகின்றது.

Also Read… சர்வம் மாயா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு… புகைப்படங்களைப் பகிர்ந்த நிவின் பாலி!

இணையத்தில் வைரலாகும் சமந்தா ரூத் பிரபுவின் வீடியோ:

Also Read… ViRosh: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை.. இன்பதிர்ச்சியை கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ