பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரங்கள் இதோ!
Hema Rajkumar Salary: தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து மக்களின் மனதை ஈர்த்துவருபவர் ஹேமா ராஜ்குமார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகிறார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஹேமா ராஜ்குமார்
தமிழில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் (Vijay TV), தொடர்ந்த பல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் எப்போதுமே டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) இருந்துவரும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் (Pandian stores). இந்த சீரியலானது சீசன் 1 முடிந்து, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலானது ஒரு குடும்பத்திற்கு நடக்கும் குழப்பங்களை மையமாக கொண்டு வெளியாகிவருகிறது. இந்த சீரியலானது திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணியளவில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலானது மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று என்ற நிலையில், இதில் மீனா (Meena) என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் நடிகை ஹேமா ராஜ்குமார் (Hema Rajkumar). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலை தொடர்ந்து, சீசன் 2 சீரியலிலும் மீனா என்ற வேடத்தில் நடித்துவருகிறார்.
அந்த வகையில் இந்த சீரியலில் நடிப்பதற்கு இவர் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதன்படி இந்த சீரியலில் நடிப்பதற்கு நடிகை ஹேமா ராஜ்குமார், ஒரு நாளைக்கு சுமார் ரூ 6000 முதல் 8000 மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு எபிசோட் முழுவதும் நடிப்பதற்கு ரூ 10,000 பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கருப்பு பட ட்ரெய்லர் ரெடி.. ஆனால் அரசியல் குழம்பங்கள் பெரிதாக இருக்கிறது – திடீரென வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
நடிகை ஹேமா ராஜ்குமாரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை ஹேமா ராஜ் குமார் வெறும் சீரியல் நடிகையாக மட்டுமில்லாமல், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சித்தார்த்தின் அருவம், அருள்நிதியின் ஆறது சினம் மற்றும் இயக்குநர் ராம் நடித்த சக்கரவர்த்தி போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இதை தவிர, பெரிய ஹீரோக்களின் படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களிலும் நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து, பாண்டிய ஸ்டோர்ஸ் சீரியலில் நாயகியாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த சீரியலானது சீசன் 1 மற்றும் சீசன் 2 என கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் தற்போதுவரையிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் எப்போதும் டாப் 5 இடங்களில் இந்த் சீரியல் இருக்கும். அந்த வகையில் 2026 மே முதல் வாரத்தில் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பியில் 3வது இடத்தைப் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.