Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே24’ படத்திற்கு இசையமைக்கிறாரா சாய் அபயங்கர் ?
SK24 Movie Update : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் மதராஸி, பராசக்தி என அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. இந்த நிலையில் அவரின் புதிய படமான எஸ்கே 24 படத்திற்காக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என கூறப்படும் நிலையில், அதற்குச் சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட் பற்றி பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 23 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து 2 படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அமரன் (Amaran). இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் படத்துக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து மதராஸி (Madharasi) மற்றும் பராசக்தி (Parasakthi) என இரு படங்களில் நடித்த வருகிறார். இந்த இரு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இதில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் உருவாகிவரும் மதராஸி படமானது முழுக்க அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவரும் நிலையில், வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது.
இப்படத்தை அடுத்ததாகப் பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கிவருகிறார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படங்களை அடுத்ததாக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் எஸ்கே 24 படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
எஸ்கே24 படத்திற்கு இசையமைக்கிறாரா என்பது குறித்த பற்றி சாய் அபயங்கர் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம் எஸ்கே 24 படத்தில் நீங்கள் இசையமைக்கிறீர்களா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “இருங்கள் அப்டேட் வரும்” என்று என்று கூறியுள்ளார். இந்நிலையில், எஸ்கே 24 படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
சாய் அபயங்கர் பேசிய வீடியோ :
Q: There is a Buzz going on in social media that you are doing music for #Sivakarthikeyan‘s next film (#SK24)❓#SaiAbhyankkar: Update Varum😄 pic.twitter.com/GvYpaaF1xB
— AmuthaBharathi (@CinemaWithAB) July 3, 2025
எஸ்கே24 திரைப்படம் ;
சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படத்தை குட் நைட் படப் பிரபல இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் விதத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயனும் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனை நேரில் சந்தித்து அவரின் பிறந்தநாளுக்கு வாட்ச் பரிசளித்திருந்தார். அதனால் இந்த கூட்டணி உண்மைதான் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கதைக்களமானது அப்பா மற்றும் மகனுக்கு இடையேயான படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் அப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இயக்குநர் விநாயக் சந்திரசேகரின் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.