RJ Balaji: கருப்பு படத்தில் வாட்டர்மெலான் காட்சி வைக்க காரணம் அதுதான் – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!
Suriya Watermelon Scene: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பிலும் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இந்த படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்தில் சூர்யா வாட்டர்மெலான் சாப்பிடுவதுபோன்ற காட்சிகள் மீண்டும் அமைப்பதற்கு என்ன காரணம் என ஆர்.ஜே.பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.

சூர்யா
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் கோலிவுட்டில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் 45வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கருப்பு (Karuppu). இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூர்யா ஆக்ஷன் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக மார்டன் வழக்கறிஞராக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போ கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. அந்த வகையில் இப்படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி காமினேஷன் எவ்வாறு இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது. ஒன்றில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தில் சூர்யா வாட்டர்மெலான் சாப்பிடுவதுபோன்ற காட்சிகள் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு படம் என்ன ஆனது? தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய விசயம்
கருப்பு படத்தில் இடம்பெற்ற வாட்டர்மெலான் காட்சி குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசிய விஷயம்:
அந்த நேர்கணலில் அவர் பேசுகையில், “நாங்கள் கருப்பு பட கதையை முதலில் எழுதியபோது, அதில் மக்களைச் சிரிக்க வைக்கும் பல வேடிக்கையான, பொழுதுபோக்குத் தருணங்கள் இருந்தது. பின்னர், நாங்கள் அதை சூர்யா சாரிடம் கூறியபோது, கதையின் சில அம்சங்களை அவருக்காகவே பிரத்யேகமாக மாற்றியமைத்தோம்.
இதையும் படிங்க: கருப்பு படத்தின் சென்சார் இப்படிதான் அமைந்தது – ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், கருப்பு பட டீசரில் சூர்யா சார் தர்பூசணி சாப்பிடும் ஒரு காட்சி உள்ளது. நாங்கள் அந்தக் காட்சியை கஜினி படத்தின் ஒரு காட்சியுடன் தொடர்புபடுத்தி மீண்டும் வைத்திருந்தோம். இதுபோல, அவருக்கு மேலும் பொருத்தமாகவும், படத்தில் அவரின் இருப்பை மேம்படுத்தவும் கதையில் பல மாற்றங்களைச் செய்தோம்” என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு படத்தில் வாட்டர்மெலான் காட்சி குறித்து ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்த விஷயம் குறித்த பதிவு:
#RJBalaji About This Scene 🤯
– When we first wrote this story, it had a lot of fun, entertaining moments that would make people laugh. Later, when we narrated it to #Suriya sir, we modified certain aspects of the story specifically for him.
– For example, in the teaser,… pic.twitter.com/w18gOUzoyq
— Movie Tamil (@_MovieTamil) May 1, 2026
கருப்பு படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த படத்தில் திரிஷா இணைந்து நடித்திருக்கும் நிலையில், அவர் இப்படத்தின் தொடர்பாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியிருந்த நிலையில், அதற்கும் அவர் பெரிதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.