ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ

Aan Paavam Pollathathu Review: நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாக உள்ள ஆண் பாவம் பொல்லாதது படத்தின் எக்ஸ் விமர்சனம் வெளியாகியுள்ளது.

ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ

ஆண் பாவம் பொல்லாதது

Published: 

30 Oct 2025 19:54 PM

 IST

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சீரியலில் நாயகனாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று தற்போது வெள்ளித்திரையிலும் நாயகனாக கலக்கி வருகிறார். அதன்படி நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி அவர் நாயகனாக நடித்து இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ஸ்வீட் ஹார்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண் பாவம் பொல்லாதது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே ரசிகர்கள் தொடர்ந்து அந்தப் படம் சிறப்பாக இருக்கும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில் படத்தின் பிரியூ காட்சி வெளியாகி படத்தைப் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் படம் நாளை 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண் பாவம் பொல்லாதது குறித்து வெளியான விமர்சனம்:

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நாங்க செம்ம ஜோடி-ன்னு காட்டிக்க விட்டுக்கொடுக்குறது, பெண்ணியம் பேசுறது, உன் உரிமை, உனக்கு பிடிச்ச மாதிரி இருந்துக்கோ-னு சொல்லுவோம். ஆனா கல்யாணம் முடிஞ்சு ரியாலிட்டிக்கு வரும் போது அது அப்படியே மாறிடும். இதுதான் ஆண்பாவம் பொல்லாதது

ஆண் பாவம் பொல்லாதது குறித்து வெளியான விமர்சனம்:

ஆண் பாவம் பொல்லாதது படம் மிகவும் சுவாரஸ்யமாகவும் ஈடுபாடாகவும் இருக்கிறது. முழுக்க முழுக்க சிரிப்பு தான். ஆனால் முக்கியமான இடங்களில் எமோஷ்னல் காட்சிகளும் இருந்தது.

ஆண் பாவம் பொல்லாதது குறித்து வெளியான விமர்சனம்:

இந்தப் படம் நம் சமூகத்தின் பெரும்பாலான உணர்வுபூர்வமான தலைப்புகளைப் பற்றிப் பேசுகிறது, மேலும் அவை இருபுறமும் சரியாகக் கையாளப்பட்டுள்ளன. ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் கதாபாத்திரங்கள் பூனை மற்றும் எலி நடிப்பு போன்றவை வேடிக்கையானவை, முக்கியமாக சம்பவக் கருத்துக்கள், நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

ஆண் பாவம் பொல்லாதது குறித்து வெளியான விமர்சனம்:

படத்தின் முதல் பாகம் மிகவும் சிறப்பாக இருந்தது. மிகவும் விறுவிறுப்பாக காமெடியாக சென்ற இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி சிறப்பாக இருந்தது.

ஆண் பாவம் பொல்லாதது குறித்து வெளியான விமர்சனம்:

ஒரு ஆச்சரியமான காரணி ரியோராஜ் மற்றும் மாளவிகா அவர்களின் பாத்திரங்களுக்கு சரியான தேர்வுகள், அதே நேரத்தில் விக்னேஷ் காந்த் எதிர்பாராத மற்றும் ஈர்க்கக்கூடிய நடிப்பை வழங்குகிறார்.