Rio Raj: எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் – ரியோ ராஜ் ஓபன் டாக்!

Rio Raj About Sivakarthikeyan: சரவணன் மீனாட்சி சீசன் 3 என்ற தொடரில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ரியோ ராஜ். அதை அடுத்ததாக தற்போது சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவரின் ஆண்பாவம் பொல்லாதது என்ற படமானது வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரியோ ராஜ், சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Rio Raj: எல்லாத்துக்குமே முழு முதல் காரணம் சிவகார்த்திகேயன்தான் - ரியோ ராஜ் ஓபன் டாக்!

ரியோ ராஜ் மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

27 Oct 2025 15:43 PM

 IST

கோலிவுட் சினிமாவில் சின்னதிரை மூலமாக மக்களிடையே பிரபலமாகி சினிமாவில் நுழைந்த பல்வேறு பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் நடிகர் ரியோ ராஜ் (Rio Raj). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” (Nenjamundu Nermaiyundu Odu Raja). இப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படமானது கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றியிருந்தது. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்க, சிவகார்த்திகேயன்தான் தயாரித்திருந்தார். இந்த படமானது ரியோ ராஜிற்கு நல்ல வரவேற்பையே பெற்றுக்கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்து “ஜோ” (Jo) என்ற வெற்றி திரைப்படத்தையும் இவர் கொடுத்திருந்தார்.

அந்த வகையில் இவரின் முன்னணி நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு நவம்பரில் வெளியாக காத்திருக்கும் படம்தான் “ஆண்பாவம் பொல்லாதது” (Aan paavam pollathathu). இந்த படத்தை இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரியோ ராஜ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்… வைரலாகும் அப்டேட்

சிவகார்த்திகேயன் குறித்து ரியோ ராஜ் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ரியோ ராஜ், “இந்த ஆண்பாவம் பொல்லாதது படம் மட்டுமில்ல, இதற்கு முன் நடந்த சில படாங்கிகளும் , இதற்கு பின் நடக்கவுள்ள படங்களுக்கும் முதல் முழு காரணம் சிவகார்த்திகேயன் அண்ணாதான். சிவகார்த்திகேயன் அண்ணா நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் கார்த்திக் வேணுகோபால் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றால், ஜோ படத்தில் ஹரிஹரன் ராம் இல்லை, சுவீட்ஹார்ட் படத்தில் ஸ்வினீத் இல்ல, மேலும் ஆண்பாவம் பொல்லாதது படத்தில் கலையரசன் தங்கவேல் இல்லை.

இதையும் படிங்க: இந்த முழு விஷயமும் கவிதையாக இருந்தது.. இட்லி கடை பட ஷூட்டிங் குறித்து நித்யா மேனன்!

அந்த வகையில் என்மீது முதல் நம்பிக்கை வைத்த சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு ரொம்ப நன்றி. இந்த படத்திற்கும் சரி இனிவரும் அடுத்த படங்களுக்கும் சரி சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு மிக்க நன்றி” என நடிகர் ரியோ ராஜ் பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் குறித்து ரியோ ராஜ் பேசிய வீடியோ பதிவு :

இந்த ஆண்பாவம் பொல்லாதது படத்தில் ரியோ ராஜ் முன்னணி நாயகனாக நடிக்க, நடிகை மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜோ என்றார் அப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதை அடுத்ததாக 2வது முறையாக ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.