பூஜைகளுடன் தொடங்கியது ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் பட ஷூட்டிங்!

An Ordinary Man Movie Shooting Pooja: தமிழில் பிரபல கதாநாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் ரவி மோகன். இவர் தற்போது இயக்குநராகவும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.

பூஜைகளுடன் தொடங்கியது ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் பட ஷூட்டிங்!

அன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு பூஜை

Updated On: 

06 Mar 2026 10:57 AM

 IST

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடிப்பில் தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இதில் ரவி மோகன் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை என்று கூறலாம். இந்த படத்தை அடுத்தாக ப்ரோ கோட் (Bro Code), கராத்தே பாபு (Karathey Babu) என அடுத்தடுத்த புது திரைப்படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர் தொடங்கியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கீழ் தனது இயக்கத்தில் புது படத்தை இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகும் புது படம்தான் “அன் ஆர்டினரி மேன்” (An Ordinary Man). இதில் ஹீரோவாக நடிகர் யோகி பாபு (Yogi Babu) நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ கடந்த 2025ம் ஆண்டிலே வெளியாகியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இதன் பூஜை நேற்று 2026 மார்ச் 5ம் தேதியில் நடைபெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராலே’… சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ வீடியோ பாடல் வெளியீடு!

அன் ஆர்டினரி மேன் படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் பூஜை தொடர்பான பதிவு:

இந்த படத்தில் நடிகர் யோகி பாபு லீட் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், இவருடன் யார் யார் நடிக்கிறார்கள் என இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தை ரவி மோகன் இயக்கும் நிலையில், முற்றிலும் காமெடி கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது தயாராகிவருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உண்மை கதையில்… செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியானது!

இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருந்த நிலையில், இதில் ரவி மோகன், யோகி பாபு மற்றும் கெனிஷா பிரான்சிஸ் போன்ற பலரும் கலந்துகொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகபரவிவருகிறது.

ரவி மோகனின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படங்கள் :

இறுதியாக ரவி மோகனின் நடிப்பில் பராசக்தி என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தினை அடுத்ததாக ரவி மோகன் வித்தியாசமான கதைகளில் நடித்தவந்தார். டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இது முழுக்க அரசியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இது 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் ப்ரோ கோட் மற்றும் ஜீனி போன்ற படங்களும் தயாராகிவரும் நிலையில், ஜீனி இந்த 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Follow Us
Related Stories
Jana Nayagan: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்க்கும் மறு ஆய்வுக்குழு .. சென்சார் எப்போது கிடைக்கும்?
Arjun Das: பணம் கொடுக்கும் நவீன மிஷின்.. வெளியானது அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ பட டைட்டில் டீசர்!
Sai Abhayankkar: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!
‘சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராலே’… சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’ வீடியோ பாடல் வெளியீடு!
ஒரே நிற உடையில்.. ஒன்றாக திருமண விழாவில் கலந்துகொண்ட விஜய் மற்றும் திரிஷா – வைரலாகும் வீடியோ!
Anaswara Rajan: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி