Rashmika Mandanna : அதிரடி நாயகியாக ராஷ்மிகா மந்தனா.. குபேரா படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
Rashmika Mandanna Salary In Kuberaa Movie : கன்னட மொழி திரைப்படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பான் இந்திய ஹிட் நடிகைகளில் டாப் 5 நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் குபேரா படமானது வெளியாகியிருக்கும் நிலையில், அந்த படத்தில் நடிப்பதற்கு அவர் பெற்ற சம்பளம் குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
பான் இந்திய நடிகைகளில் ஒருவர்தான் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் குபேரா (Kuberaa). இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாகத்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீரா (Sameera) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில், சாதாரண பெண் போல நடித்து அசத்தியுள்ளார்.
இந்த சமீரா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளார் தெரியுமா? தனுஷுடன் இந்த குபேரா படத்தில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சுமார் ரூ. 5 கோடிகளைச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதைப் பற்றிய தகவல்களை சினியுலகம் செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
குபேராவில் குறைவாகச் சம்பளம் வாங்கக் காரணம் என்ன?
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் குபேரா படத்தின் முன்னே வெளியான திரைப்படம் சிக்கந்தர். இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க நடிகர் சல்மான்கான் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா மந்தனா நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா சுமார் ரூ 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன்னே அவர் குபேரா படத்தில் பாந்தமான நிலையில், அவர் குபேரா படத்தில் நடிப்பதற்குச் சம்பளம் குறைவாக வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பான் இந்திய வசூல் நாயகி ராஷ்மிகா மந்தனா :
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான புஷ்பா 2 படமானது உலகளவில் சுமார் ரூ 2000 கோடிகளை வசூல் செய்து சாதனையைப் படைத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் அவர் நடித்திருந்த சாவா படமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூல் செய்திருந்தது.
இடமானது சுமார் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்படங்களைத் தொடர்ந்து வசூல் நாயகியாகக் கருதப்பட்ட அவருக்கு சிக்கந்தர் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் இந்த குபேரா படமானது நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.