Mysaa: மைசா படத்திற்காக தீவிர சண்டை பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!
Rashmika Fighting Training : ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்துவரும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படம்தான் மைசா. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் நிலையில், இப்படத்திற்காக சண்டை பயிற்சியில் நடிகை ராஷ்மிகா இருக்கிறார். இது குறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

ராஷ்மிகாவின் சண்டை பயிற்சி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருந்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு (Vijay Deverakonda) கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. அந்த வகையில் தங்களின் திருமண கொண்டாட்டத்தை முடித்த, ஜோடி தற்போது படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் இணைந்தது ரணபாலி (Ranabaali) என்ற படத்திலும் நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக படங்களில் நடிக்கிறர்கள் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் தெலுங்கு இயக்குநர் ரவீந்திர புல்லே (Rawindra Pulle) இயக்கத்தில், ராஷ்மிகா நடித்துவரும் படம்தான் மைசா. இதில் அவர் லீட் நாயகியாக நடித்துவரும் நிலையில், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக பேங்காக்கில் சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். இதுகுறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஹாய் நானா பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் தேவரகொண்டா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ராஷ்மிகா சண்டை பயிற்சியில் ஈடுபடுவது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Beast mode ON 💥#RashmikaMandanna is currently undergoing rigorous 8-hour-a-day Hand-to-hand combat training in Bangkok for #Mysaa 🔥
Her never before seen action packed avatar is going to surprise everyone on the big screen ❤️🔥@iamRashmika @rawindrapulle @jakes_bejoy… pic.twitter.com/URGKY2oY7x
— UnFormula Films (@unformulafilms) April 18, 2026
நடிகை ராஷ்மிகா மந்தனா, மைசா படத்தின் சண்டை பயிற்சிக்காக தினமும் கிட்டத்தட்ட 8 மணி நேரத்தை செலவழிகிறாராம். தற்போது ஆக்ஷன் காட்சிகளுக்காக பேங்காக்கில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறர். இந்த மைசா படமானது முற்றிலும் பெண் லீட் ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தைத் தொடர்ந்து, முழுவதுமாக பெண் லீட் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற படம் தி கேர்ள்பிரண்ட்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி உரிமை பெற்ற பிரபல நிறுவனம்? அட இத்தனை கோடியா?
இப்படத்திற்காக தெலுங்கானா அரசின் மாநில விருதையே பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தொடர்நது ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இந்தியில் காக்டைல் 2 என்ற படம் தயாராகிவருகிறது. இதில் ஷாகித் கபூர் மற்றும் க்ரிதி சனோன் உடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.