ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம் படத்திலிருந்து வெளியானது ராப் பேட்டில் லிரிக்கல் வீடியோ
Rap Battle Lyrical Video | தமிழ் சினிமாவில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தாஷமக்கான். இந்தப் படத்தில் இருந்து படக்குழு தற்போது லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ராப் பேட்டில் லிரிக்கல் வீடியோ
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மக்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு தொடர்ந்து கடந்த சில வருடங்களாக வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டீசல். கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இந்த டீசல் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
மேலும் தொடர்ந்து ஜாலியான படங்களில் நடித்து வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக வெளியான டீசல் படம் மிகவும் அழுத்தமான கதையை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ள படம் தாஷமாக்கான். சென்னையில் உள்ள தாஷமாக்கான் என்ற பகுதியில் வாழும் ஒரு ராப் இசை கலைஞராக இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
தாஷமக்கான் படம் படத்திலிருந்து வெளியானது ராப் பேட்டில் பாடல்:
இந்த தாஷமக்கான் படத்தை இயக்குநர் வினித் வரபிரசாத் எழுதி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி முகுந்தன், சத்யராஜ் மற்றும் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து ராப் பேட்டில் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கச்சேரி அப்புறம் ஆடலாம்… இப்போ கபடி ஆடலாமா – மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் கில்லி படம்!
தாஷமக்கான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Koluthi’vudu #RapBattle song from #Dashamakan is here for you all to vibe. 🎤🔥
Tamil – https://t.co/y83UFnwg8k
Telugu – https://t.co/TW6qfxr5hi
@tseriessouthA @willbrits musical
@ThinkStudiosInd @idaaproductions @VineethVarapra1 @amirads2 @Tseries @PreityMukundan… pic.twitter.com/Sma8ZvbLB7— Harish Kalyan (@iamharishkalyan) February 17, 2026
Also Read… நல்லதோ கெட்டதோ எப்போதும் ஒன்றாக இருப்போம் – அசோக் செல்வன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு