Dhurandhar 2: ரன்வீர் சிங் – சாரா அர்ஜுனின் ‘துரந்தர் 2’ டீசர் வெளியானது.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

Dhurandhar 2 Teaser Release: பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்வீர் சிங். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம்தான் துரந்தர். இப்படத்தின் பாகம் 2 விரைவில் வெளியாகும் என கூறபட்டுவந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியாகியுள்ளது.

Dhurandhar 2: ரன்வீர் சிங் - சாரா அர்ஜுனின் துரந்தர் 2 டீசர் வெளியானது.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

துரந்தர் 2 படத்தின் டீசர்

Updated On: 

03 Feb 2026 12:59 PM

 IST

பான் இந்திய பிரபல நாயகனாக இருந்துவருபவர் ரன்வீர் சிங் (Ranveer Singh). இவரின் நடிப்பில் இந்தி மொழியில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவர் தமிழிலும் விரைவில் சங்கரின் (Shankar) இயக்கத்தில் புது திரைப்படத்தில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் ஸ்பை திரில்லர் கதைக்களத்தில், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான திரைப்படம்தான் துரந்தர் (Dhurandhar). இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் (Aditya Dhar) இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரன்வீர் சிங் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாரா அர்ஜுன் (Sara Arjun) நடித்திருந்தார். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக சைவம், தெய்வ திருமகள் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் பொன்னியின் செல்வன் படத்திலும் இளம் பருவ நந்தினி வேடத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார்.

இவர் தன்னைவிடவும் 20 வயது மூத்த நடிகரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து, துரந்தர் படத்தின் மூலம் பான் இந்திய அளவுக்கு பிரபலமானார். துரந்தர் படமானது சுமார் ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றிப் பெற்றிருந்தது. இந்நிலையில் துரந்தர் 2 (துரந்தர் தி ரிவென்ஜ்) (Dhurandhar The Revenge) படமானது தயாராகியுள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி மற்றும் டீசரை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே சிலம்பரசன்! லிட்டில் ஸ்டார் முதல் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனான பயணம்!

நடிகர் ரன்வீர் சிங் துரந்தர் 2 படத்தின் அதிரடி ஆக்ஷ்ன் டீசர் பதிவு:

துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜூனுடன் நடிகர்கள் ஆர்.மாதவன், சஞ்சய் தத் மற்றும் அக்ஷய் கன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் நடிகர் ரன்வீர் சிங் பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு இந்திய ஸ்பையாக நடித்திருந்தார். இப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன், காதல் மற்றும் தேசபக்தி போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருந்தது. இப்படத்தின் ரிலீஸின்போதே துரந்தர் 2 படமானது வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் துரந்தர் 2 படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் லக்கி படம்.. எப்போது? எதில் பார்க்கலாம்?

இப்படத்தின் ரிலீஸின்போதுதான் கன்னட நடிகர் யாஷின் டாக்சிக் திரைப்படமானது, பான் இந்திய அளவிற்கு வெளியாகிறது. அந்த விதத்தில் இந்த இரு படங்களுக்கும் இடையே நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் இருக்கும் என்பது உறுதி. அந்த விதத்தில் தற்போது வெளியாகியுள்ள “துரந்தர் தி ரிவென்ஜ்” படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..