Ram Charan: பெடி திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ராம் சரண் – நகைச்சுவையுடன் வெளியான வீடியோ!

Peddi Movie Dubbing: தெலுங்கு சினிமாவில் உச்ச கதாநாயகனாக கலக்கிவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் 16வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் பெடி. இந்த படமானது இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டப்பிங் பணியை ராம் சரண் தொடங்கியுள்ளார். இது தொடர்பான நகைச்சுவை வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Ram Charan: பெடி திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ராம் சரண் - நகைச்சுவையுடன் வெளியான வீடியோ!

ராம் சரணின் பெடி படம்

Updated On: 

01 Mar 2026 20:30 PM

 IST

நடிகர் ராம் சரண் (Ram Charan) தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 15 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் இறுதியாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர் (Game Changer). இதில் ராம் சரண் ரெட்டை வேடத்தில் நடிக்க, தமிழ் இயக்குநர் எஸ். சங்கர் (S. Shankar) இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த திரைப்படத்தை அடுத்தாக ராம் சரண் இணைந்த இயக்குநர்தான் புச்சி பாபு சனா (Buchi Babu sana). இவர்களின் கூட்டணியில் உருவாகிவந்த “பெடி” (Peddi) படம்தான், ஆரம்பத்தில் ஆர்சி16 என அழைக்கப்பட்டுவந்தது. இந்த பெடி படத்தில் நடிகர் ராம் சரண் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இயக்குநர் புச்சி பாபு சனா மற்றும் ராம் சரண் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே ரங்கஸ்தலம் என்ற படமானது வெளியாகியிருக்கிறது.

இதையடுத்து பெடி படத்தின் மூலமாக மீண்டும் 2வது முறை இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங்கை நடிகர் ராம் சரண் முடித்த நிலையில், தற்போது இதன் டப்பிங் பணியில் இறங்கியுள்ளார். பெடி படத்தின் டப்பிங்கில் ராம் சரண் மற்றும் புச்சி பாபு சனா இருவரும் காமெடியாக பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் அன்பே டயானா படத்தின் டைட்டில் டீசர்

ராம் சரண் டப்பிங் செய்வது தொடர்பான படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு:

ராம் சரணின் பெடி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்:

இந்த பெடி திரைப்படத்தை புஷ்பா 2, குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம்தான் தயாரித்துவருகிறது. இப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்க, இணை இயக்குநராக புஷ்பா படத்தை இயக்கியிருந்த சுகுமார் பணியாற்றியுள்ளார். ஆக மொத்தத்தில் மிக பிரம்மாண்டமான கூட்டணியில் இப்படமானது தயாராகிவருகிறது. இப்படத்தில் ரேம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யேந்து, ஜெகபதி பாபு மற்றும் விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: மீசையமுறுக்கு 2 பட முதல் பாடல் ரிலீஸ் எப்போது? அட இந்த நடிகையின் சிறப்பு நடனமா?

கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் தயாராகியுள்ள நிலையில், இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஏற்கனவே முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படம் கிட்டத்தட்ட ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், நிச்சயமாக ரூ 500 கோடிக்கும் மேல வசூல் செய்யும் என எதிர்பார்ப்படுகிறது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ