ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

Bun Butter Jam Movie: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனவர் ராஜூ ஜெயமோகன். கோலிவுட் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகும் படம் பன் பட்டர் ஜாம். இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

பன் பட்டர் ஜாம்

Published: 

01 Jul 2025 21:15 PM

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ராஜு ஜெயமோகன் (Actor Raju Jayamohan) தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் காமெடி நடிகராக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராஜு ஜெயமோகன் தனது காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டும் இன்றி அந்த சீசனின் வெற்றியாளராக கோப்பையை கைப்பற்றினார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ராஜூ தற்போது கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார். முன்னதாக தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ராஜு ஜெயமோகன் தற்போது பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்தது. தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கிளிம்ஸ் வீடியோவைப் பார்த்து ராஜு ஜெயமோகனை பாராட்டிய நடிகர் விஜய்:

சமீபத்தில் பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோவைப் பார்த்த தளபதி விஜய் ராஜு ஜெயமோகனை போனில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார். மேலும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுவதாக விஜய் கூறியதாகவும், நடிகர் ராஜு ஜெய மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

பன் பட்டர் ஜாம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது?

நடிகர் ராஜு ஜெயமோகனின் பன் பட்டர் ஜாம் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாடலின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் 3-வது பாடல் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பாடல் குறித்து பன் பட்டர் ஜாம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: