Rajinikanth : ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ
Rajinikanth Workout Video Viral : நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கூலி. இப்படமானது மக்களில் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போது, ரஜினிகாந்த் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் உடற்பயிற்சி வீடியோ
தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளைக் கடந்து, தற்போது வரையிலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான படம் கூலி (Coolie). இந்த படமானது ரஜினியின் 171வது படமாக வெளியாகியிருந்தது. இப்படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்த முதல் படமாகும். இந்தப் படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிகள் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜிம்மில் (Gym) உடற்பயிற்சி செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 74 வயதிலும் மிரட்டும் அளவிற்கு அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ரசிகர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விஜய்யின் துப்பாக்கியில் இருந்த ரிஸ்க்.. ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்!
நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ :
Superstar workout 🏋️♂️❤️🔥pic.twitter.com/arASMUgVO3
— AmuthaBharathi (@CinemaWithAB) August 15, 2025
கூலி திரைப்படத்தின் முதல்நாள் வசூல்
கூலி படமானது தமிழகத்தில் கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் காலை 9 மணி காட்சிகளுடன் வெளியாகியிருந்தது. இப்படமானது தமிழகம் மட்டுமில்லாமல் உலகமெங்கும் ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகியிருந்தது. இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், ஆமிர்கான், சௌபின் சாஹிர் மற்றும் சத்யராஜ் உட்பட பான் இந்தியப் பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது முதல் நாளில் உலக அளவில் வசூலில் சுமார் ரூ 151 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : மாஸ் ஹிட்.. வசூலை வாரிக்குவிக்கும் கூலி.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?
சினிமாவில் 50 வருடத்தைக் கடந்த ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சுமார் 50 வருடங்களை கடந்துள்ளார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 171 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி, மற்றும் ஹாலிவுட் என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் முதல் திரைப்படமாக அமைந்தது அபூர்வ ராகங்கள். கடந்த 1975ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம்தான் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இந்த படத்தை மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டோடு நடிகராக 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.