Rajinikanth: ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? – ரசிகர்கள் ஹேப்பி!

Nithilan Swaminathan And Rajinikanth : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த் இவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன், புதிய படத்தில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Rajinikanth: ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? - ரசிகர்கள் ஹேப்பி!

நித்திலன் சுவாமிநாதன் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

14 Jul 2025 12:34 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு தலைவர் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசிற்க்கு காத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படம்தான் ரஜினிகாந்த்துடன் இவர் இணையும் முதல் படமாகும். இந்த கூலி படமானது முற்றிலும் கடத்தல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை அடுத்ததாக ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பாதி முடித்திருக்கும் நிலையில், மேலும் ஒரு இயக்குநருடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம் ரஜினிகாந்த்.

கடந்த 2024ம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான, மகாராஜா (Maharaja) படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன் (Nithilan Swaminathan), புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனாலும் இந்த தகவல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினிகாந்த் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் கூட்டணி :

கடந்த 2024ம் ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர், ரஜினிகாந்த்துடன் கதை கூறிதாக தகவல்கள் வெளியாகி வந்தது. நிலையில், இந்த தகவல் உறுதியாகியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த படமானது ரஜினிகாந்த்தின் தலைவர் 173வது திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் இணையும் வெங்கட் பிரபு!

இந்த படத்திற்காக இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் உண்மை கதையை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. மேலும் இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி திரைப்படத்தின் பாடல் ஹிட் பதிவு :

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகும் படம் கூலி. இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளைத் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.