100 ஜென்மம் இருந்தாலும் நான் ஒரு நடிகனாகப் பிறக்க விரும்புகிறேன் – ரஜினிகாந்த்

Super Star Rajinikanth: தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்ததை ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

100 ஜென்மம் இருந்தாலும் நான் ஒரு நடிகனாகப் பிறக்க விரும்புகிறேன் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

Published: 

29 Nov 2025 11:22 AM

 IST

உலக அளவில் உள்ள தனது ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களால் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. 70 வயதைக் கடந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வயதிலும் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக நடித்து வரும் ரஜினிகாந்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் பிரமித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை திரையுலகினரும் அவரது ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் கோவாவில் நடைப்பெற்ற திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவாவில் தற்போது திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகின்றது. உலக அளவில் பல மொழிகளில் வெளியான படங்கள் இங்கு திரையிடப்படுகின்றது. இந்த நிலையில் இந்த விழாவில் சினிமாவில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். விருதைப் பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

100 ஜென்மம் இருந்தாலும் நான் ஒரு நடிகனாகப் பிறக்க விரும்புகிறேன்:

அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, 50 வருட சினிமாவில் என்னை கௌரவித்ததற்காக அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனக்கு சினிமாவும் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அதனால் 100 ஜென்மம் இருந்தாலும் கூட, நான் ஒரு நடிகரான ரஜினிகாந்தாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி படம்… நடிகர் யோகிபாபு வெளியிட்ட உருக்கமான பதிவு

இணையத்தில் கவனம் பெறும் நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு:

Also Read… மலையாள சினிமாவில் வெளியான ஃபீல் குட் படமான பல்து ஜான்வர் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்க

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..