Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலையாள சினிமாவில் வெளியான ஃபீல் குட் படமான பல்து ஜான்வர் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்க

Palthu Janwar Feel Good Movie: மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட்டான ஃபீல் குட் படங்கள் உள்ளது. அந்தப் பட்டியளில் நடிகர் பேசில் ஜோசஃப் நடித்துள்ள பல்து ஜான்வர் படமும் உள்ளது. இந்தப் படத்தை தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மலையாள சினிமாவில் வெளியான ஃபீல் குட் படமான பல்து ஜான்வர் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்க
பல்து ஜான்வர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Nov 2025 21:51 PM IST

பான் இந்திய மொழிகளில் எந்த மொழியில் ஒரு ஃபீல் குட் படம் வெளியாகி இருந்தாலும் அதனை மற்ற மொழிகளில் உள்ள ரசிகர்கள் கொண்டாடியத் தவறியதில்லை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஜானர் படங்கள் பிடித்து இருந்தாலும் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஜானர் என்பது ஃபீல் குட் படம் தான். அப்படி அதிக அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ஃபீல் குட் படங்கள் மலையாள சினிமாவில் தொடர்ந்து அதிக அளவில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் முன்னதாக மலையாள சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பல்து ஜான்வர். இந்தப் படத்தை இயக்குநர் சங்கீத் பி ராஜன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு திரைக்கதையை வினாய் தாமஸ் மற்றும் அனீஷ் அஞ்சலி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் இந்திரன், ஜானி ஆண்டனி, திலீஷ் போத்தன், ஷம்மி திலகன், ஸ்ருதி சுரேஷ், உன்னிமய பிரசாத், ஜெய குருப், அதிரா ஹரிகுமார், தங்கம் மோகன், ஸ்டெபி சன்னி, ஷீனா சந்தோஷ், ராஜித மது, விஜயகுமார், கிரண் பீதாம்பரன், சிபி தாமஸ், ஜோஜி ஜான், வைசாக் ஷிபு, வினோய் தாமஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Also Read… அனுபமா பரமேசுவரனி லாக்டவுன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

பல்து ஜான்வர் படத்தின் கதை என்ன?

வெட்னெரி டாக்டரான பேசில் ஜோசஃப் ஒரு அழுத்தத்தின் காரணமாக மலை கிராமம் ஒன்றில் பணியாற்ற நேர்கிறது. விருப்பமே இல்லாமல் அந்த ஊருக்கு சென்ற பேசில் ஜோசஃப் தொடர்ந்து அந்த ஊர் மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக எமோஷ்னலாக இணைகிறார். மேலும் அந்த ஊரில் வாழும் மக்களும் தொடர்ந்து விலங்குகள் மீது எந்த் அளவிற்கு பாசம் வைத்து இருக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களுடன் பேசில் எப்படி இணைகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… தொடர்ந்து 8-வது முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகும் அனிருத்? வைரலாகும் தகவல்