Rajinikanth: 50 வருட சினிமா பயணம்.. நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை!

Rajinikanths X Post : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நாயகனாக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் இந்த 2025ம் ஆண்டுடன் சினிமாவில் இவர் 50 வருடத்தைக் கடந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rajinikanth: 50 வருட சினிமா பயணம்.. நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை!

ரஜினிகாந்த்

Published: 

15 Aug 2025 16:30 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் கே. பாலசந்தர் மூலம், சினிமாவில் நடிகராக இவர் அறிமுகமானார். கடந்த 1975ம் ஆண்டு வெளியான “அபூர்வ ராகங்கள்” (Apoorva Raagangal) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்நிலையில், இப்படத்தை அடுத்ததாக பல்வேறு படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டோடு சினிமாவில் இவர் சுமார் 50 வருடத்தை கடந்துள்ளார். இவரின் 50 வருட ஸ்பெஷலாக, இந்த ஆண்டில் கூலி (Coolie) திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இந்த திரைப்படத்தைத் தயாரித்திருந்தது.

இது ரஜினிகாந்தின் 171வது படமான வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த 2025ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50வது வருட சினிமா பயணத்தைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவருக்கு அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களைக் கூறி பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், அதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : இணையத்தில் கசிந்தது ரஜினிகாந்தின் கூலி… அதிர்ச்சியில் படக்குழு

நன்றி தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு :

இந்த பதிவில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 79வது சுதந்திர தினத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், எனது 50 வருட சினிமா பயணத்திற்கு வாழ்த்துக்களைக் கூறிய முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன் , மம்முட்டி மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உட்பட பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களைக் குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : என்னோட விஷனில் ரஜினிகாந்த் சார் இப்படித்தான்.. கூலி படத்தினை குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விஷயம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்திய பிரபலங்கள்:

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 2025ம் ஆண்டுடன் தனது 50வருட சினிமா பயணத்தை கடந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஹிருத்திக் ரோஷன், வைரமுத்து, இளையராஜா, லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் பல பிரபலங்கள் வாழ்த்தி பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கும் விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..