Thalaivar173: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Thalaivar173 Movie Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக சுமார் 50 வருடங்களுக்கும் மேல் இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், இதையடுத்து சுந்தர் சி-யின் பக்கத்தில் தலைவர் 173 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thalaivar173: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு!

தலைவர் 173 திரைப்படம்

Published: 

09 Nov 2025 15:23 PM

 IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி (Coolie). இப்படம் ஆரம்பத்தில் தலைவர்171 (Thalaivar171) என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024ம் மிக பிரம்மாண்டமாக தயாராகிவந்தது. இந்த படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இதில் ரஜினிகாந்துடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படம் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துவருகிறார். அந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் தயாரிப்பில் தயாராகவுள்ள புதிய படத்திலும் இணைந்துள்ளார்.

இந்த படமானது தற்காலிகமாக தலைவர்173 (Thalaivar173) என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி (Sundar C) இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்தின் தலைவர்173 திரைபடக்குழு வெளியிட்ட அறிவிப்பு வீடியோ பதிவு :

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தை அடுத்ததாக இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து சுந்தர் சி-யுடன் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 173 திரைப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: கதை தேர்வு குறித்து பாராட்டிய ரசிகர்… கலகலப்பாக பேசிய துல்கர் சல்மான்!

தலைவர்173 படத்தின் இசையமைப்பாளர் யார்:

இந்த படத்தில் நடிகர்கள் யார் மற்றும் இசையமைப்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் சுந்தர் சி-யின் பெரிய திரைப்படங்கள் அனைத்திற்கும் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த நிலையில், ரஜினிகாந்தின் இந்த தலைவர் 173 திரைப்படத்திற்கும் அவர் இசையமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையெனில் அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே தொடர்ந்து வேட்டையன், ஜெயிலர் 1, கூலி , ஜெயிலர் 2 என ரஜினியின் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்த நிலையில், இந்த தலைவர்173 படத்திற்கு இவர் இசையமைபாரா என்பது சந்தேகம்தான்.